Advertisement


மகரோவா, டிமிட்ரிவ் வெற்றி

மே 27, 2018.
 Comments  
 


Grigor Dimitrov
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பல்கேரியாவின் டிமிட்ரிவ், ரஷ்யாவின் மகரோவா வெற்றி பெற்றனர். 

பிரெஞ்ச் தலைநகர் பாரிசில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் துவங்கியது. இதன் ஆண்களுக்கான தனிநபர் பிரிவு முதல் சுற்றில் பல்கேரியாவின் டிமிட்ரிவ், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக பங்கேற்ற எகிப்தின் முகமது சபாவத்தை சந்தித்தார். முதல் செட்டை 6–1 என கைப்பற்றிய டிமிட்ரிவ், அடுத்த செட்டையும் 6–4 என வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டிலும் அசத்திய இவர் 7–6 என வென்றார். முடிவில், டிமிட்ரிவ் 6–1, 6–4, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் பிரான்சின் கெயில் மோன்பில்ஸ் 3–6, 6–1, 6–2, 6–1 என சக வீரரான பென்செட்ரிடை போராடி வீழ்த்தினார். 

மகரோவா அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6–2, 6–0 என நெதர்லாந்தின் ஆரன்டக்சை வீழ்த்தினார். 

மற்றொரு முதல் சுற்றில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக் 6–2, 6–3 என சீனாவின் வாங் யபானை தோற்கடித்தார்.

ரஷ்யாவின் மகரோவா 6–4, 6–1 என்ற செட் கணக்கில் சீனாவின் செங் ஷாசயை வென்றார். 

 

 

Advertisement

நெதர்லாண்ட்ஸ் vs ஸ்காட்லேண்ட் , போட்டி 6
நெதர்லாந்தில் T20I ட்ரை-தொடர், 2018
6/20/2018 , 14:30
விஆர்ஏ க்ரெளண்ட், ஆம்ஸ்டெல்வீன்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?