Advertisement


‘மெர்சல் அரசன்’ வாட்சன்: ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்

மே 27, 2018.
 Comments [3]  
 


chennai team, cup
 

மும்பை: ஐ.பி.எல்., பைனலில் துாள் கிளப்பிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. ‘தனி ஒருவனாக’ பேட்டிங்கில் மிரட்டிய ஷேன் வாட்சன் சதம் கடந்து அசத்தினார். இவரது கலக்கல் ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி, ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில்வீழ்த்தியது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடந்தது. நேற்று, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த பைனலில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

நிதான துவக்கம்

முதலில் ‘பேட்’ செய்த ஐதராபாத் அணிக்கு கோஸ்வாமி (5), ‘ரன்–அவுட்டாகி’ ஏமாற்றினார். லுங்கிடி, கரண் சர்மா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ஷிகர் தவான், ஷர்துல் தாகூர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ தவான் (26) போல்டானார்.

வில்லியம்சன் விளாசல்

பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய சாகிப் அல் ஹசன், ஜடேஜா வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். டுவைன் பிராவோ வீசிய 12வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி விரட்டிய வில்லியம்சன் (47), கரண் சர்மாவிடம் சரணடைந்தார்.  டுவைன் பிராவோ ‘வேகத்தில்’ சாகிப் (23) வெளியேறினார். தீபக் ஹூடா (3) நிலைக்கவில்லை. டுவைன் பிராவோ, லுங்கிடி, ஷர்துல் தாகூர் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த கார்லஸ் பிராத்வைட் (21) ஆறுதல் தந்தார்.

ஐதராபாத் அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 178 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் (45) அவுட்டாகாமல் இருந்தார்.

வாட்சன் அபாரம்

பின் களமிறங்கிய சென்னை அணிக்கு டுபிளசி (10)ஏமாற்றினார். பின் வாட்சன் பட்டையை கிளப்பினார்.இவரது மிரட்டல்(மெர்சல்) ஆட்டத்தில் சென்னை ரசிகர்கள் மயங்கிப் போயினர். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார்.சந்தீப் சர்மா வீசிய 6வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரிஅடித்தார்.

மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ரெய்னா, கவுல் வீசிய 7வது ஓவரில், 2 பவுண்டரி விரட்டினார். கவுல் வீசிய 9வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த வாட்சன், சந்தீப் வீசிய 13வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த போது பிராத்வைட் பந்தில் ரெய்னா (32) அவுட்டானார். அபாரமாக ஆடிய வாட்சன், 51 பந்தில் சதமடித்தார். ரஷித் கான், சித்தார்த் கவுல் வீசிய 17, 18வது ஓவரில் தலா 2 பவுண்டரி விளாசினார் வாட்சன். பிராத்வைட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அம்பதி ராயுடு வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி, 18.3 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் (117), அம்பதி ராயுடு (16) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை வாட்சன் தட்டிச் சென்றார்.

சென்னையில் கொண்டாட்டம்

சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில், ‘‘மூன்றாவது முறையாக கோப்பை வென்றது மகிழ்ச்சி. இது, சிறந்த பேட்டிங் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே உணர்கிறேன். ஒவ்வொரு வெற்றியும் ஸ்பெஷல் தான். இதில் எது சிறந்த வெற்றி என்பதை கணிப்பது கடினம். வீரர்களின் வயது குறித்து விமர்சனம் எழுந்தது. என்னைப் பொறுத்தவரை உடற்தகுதி தான் முக்கியம். வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே. சென்னை செல்ல திட்மிட்டுள்ளோம். அங்கு ரசிகர்கள் மற்றும் சென்னை அணிக்கு நெருங்கியவர்களை சந்தித்து வெற்றியை கொண்டாட உள்ளோம்,’’ என்றார்.

வில்லியம்சன் ‘735’

இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலிடம் பிடித்தார். இவர், 17 போட்டியில், 8 அரைசதம் உட்பட 735 ரன்கள் குவித்தார். இதற்காக இவருக்கு ‘ஆரஞ்ச்’ நிற தொப்பியுடன் ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

ஆன்ட்ரூ டை ‘24’

இம்முறை மொத்தம் 720 விக்கெட் பதிவாகின. இதில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் பஞ்சாப் அணியின் ஆன்ட்ரூ டை, முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 14 போட்டியில், 24 விக்கெட் வீழ்த்தினார். இதற்காக இவருக்கு ‘பர்பிள்’ நிறை தொப்பியுடன், ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

872 சிக்சர்

இந்த சீசனில் மொத்தம் 872 சிக்சர் விளாசப்பட்டது. அதிகபட்சமாக, டில்லி அணியின் ரிஷாப் பன்ட், 14 போட்டியில், 37 சிக்சர் அடித்தார்.

19,901

இந்த சீசனில் மொத்தம் 19,901 ரன்கள் பதிவாகின. இதில் 11, 840 ரன்கள் சிக்சர், பவுண்டரி மூலம் கிடைத்தன.

* அதிகபட்சமாக கோல்கட்டா அணி, ஒரு இன்னிங்சில் 245 ரன்கள் (எதிர்: பஞ்சாப், இடம்: இந்துார்) எடுத்தது.

* மொத்தம் 15 இன்னிங்சில், தலா 200 அல்லது அதற்கு மேல் ரன்கள் குவிக்கப்பட்டன.

* டில்லியின் ரிஷாப் பன்ட், அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 128 ரன்கள் (எதிர்: ஐதராபாத்) எடுத்தார்.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
S SUNDARAMOORTHY 3 weeks ago | Report abuse
இரண்டு வருட தடைக்கு பின் மஹேந்திரசிங் டோனி தலைமையிலான சி ஸ்கே டீம் கோப்பையை கைப்பற்றியது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டதுதான் அதை அற்புதமான செயலால் நிறைவேத்திருக்கிறார் கூல் கேப்டன் மஹேந்திரசிங் டோனி


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
elakkumanan 4 weeks ago | Report abuse
சேப்பாக்கம் போராட்டம் ) நிலை நிறுத்த முயற்சி செய்தனர். கடைசீல, உண்மை மற்றும் திறமை வென்றது. வாழ்த்துக்கள். திறமையை தடுக்க முடியாது என்ற பாடம் இந்த உலகுக்கு உங்கள் வெற்றி சொல்லும் பாடம். அது இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் தேவை.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
rajagopalan srinivasaraghavan 4 weeks ago | Report abuse
thala dhoni is proved again . superb victory for csk thrid time. all the best dhone and team.super vistle podu.
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?