Advertisement


லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து தோல்வி

மே 27, 2018.
 Comments  
 


England, Pakistan, Lords Test Cricket
 

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184, பாகிஸ்தான் 363 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுக்கு, 235 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் (66), பெஸ் (55) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் வேகங்கள் தொல்லை தந்தனர். முகமது அபாஸ் பந்தில் பட்லர் (67), ஸ்டூவர்ட் பிராட் (0) அவுட்டாகினர். முகமது ஆமிர் ‘வேகத்தில்’ மார்க் உட் (4), டொமினிக் பெஸ் (57) வெளியேறினர்.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 242 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், முகமது அபாஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

எளிய இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 64 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி (4) ஏமாற்றினார். பின் இணைந்த இமாம்–உல்–ஹக், ஹாரிஸ் சோகைல் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பெஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹாரிஸ் சோகைல், வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டுக்கு, 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இமாம் (18), சோகைல் (39) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி, 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூன் 1ல் லீட்சில் துவங்குகிறது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?