Advertisement


கோப்பை வெல்லுமா சென்னை கிங்ஸ்

மே 26, 2018.
 Comments [1]  
 


IPL T20 Cricket, Final, Chennai, Hyedrabad
 

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் சாதிக்கும் பட்சத்தில் சென்னை அணி மூன்றாவது கோப்பை வென்று அசத்தலாம்.

இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் 4, ‘பிளே ஆப்’ சுற்றுடன் 2 அணிகள் நடையை கட்டின. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் தோனியின் சென்னை, வில்லியம்சனின் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தடை தாண்டி: சூதாட்ட பிரச்னை காரணமாக இரண்டு ஆண்டு தடைக்குப் பின் ‘சீனியர்களுடன்’ களமிறங்கிய சென்னை அணி அசத்தியது. காவிரி பிரச்னை காரணமாக உள்ளூர் சேப்பாக்கத்திற்கு பதில் புனே சென்று விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் தடைகளை கடந்து, 7வது முறையாக  பைனலுக்கு முன்னேறியது. ‘சீனியர்’ வாட்சன் (438 ரன், 1 சதம், 2 அரைசதம்), அம்பதி ராயுடு (586 ரன், 1 சதம், 3 அரைசதம்) ஜோடி, 6 முறை 40 ரன்னுக்கும் மேல் எடுத்து, சிறப்பான துவக்கம் தருகிறது.

கடந்த முறை வாய்ப்பு பெற்ற டுபிளசி கடைசி வரை துாணாக நின்று அணியை பைனலுக்கு கொண்டு வந்தார். இதனால் இன்று ராயுடு ‘மிடில் ஆர்டரில்’ தான் வரவேண்டும். 9 வது முறையாக 400 ரன்னுக்கும் மேல் குவித்த  ரெய்னா (14 போட்டி, 413 ரன்கள்) நம்பிக்கை தர வேண்டும்.

கேப்டன் தோனி (455) பேட்டிங் சென்னை அணிக்கு பெரும்பலம். மற்றபடி பின் வரிசையில் பிராவோ, ஜடேஜா, சகார் ஓரளவுக்குத் தான் கைகொடுக்கின்றனர்.

பவுலிங் எப்படி: வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாகூர் (15 விக்.,), பிராவோ (13), லுங்கிடி (10), சகார் (10) என பலர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். சுழலில் ஜடேஜா (10) நம்பிக்கை தருகிறார். ஹர்பஜன் கூடுதல் பலம் சேர்த்தால் 2010, 2011க்குப் பின் மூன்றாவது முறையாக கோப்பை வெல்லலாம்.

பேட்டிங் எழுச்சி: ஐதராபாத் அணிக்காக (2016ல் சாம்பியன்) 688 ரன்கள் குவித்த கேப்டன் வில்லியம்சன் இருப்பது அசுர பலம். இரண்டாவது முறையாக பைனலுக்கு வந்த இந்த அணிக்கு ஷிகர் தவான் (471), மணிஷ் பாண்டே (284) தவிர ‘மிடில் ஆர்டரில்’ பேட்டிங் சற்று சறுக்குகிறது. பின் வரிசையில் யூசுப் பதான் (215), சாகிப் அல் ஹசன் (216), பிராத்வைட் வலு சேர்க்கின்றனர். தகுதிச்சுற்று 2ல் 10 பந்தில் 34 ரன்கள் எடுத்த ரஷித் கானும் தொல்லை தர முயற்சிக்கலாம்.

‘சுழல்’ ஆயுதம்: ஐதராபாத் அணியின் பலம் ‘சுழல்’ தான். ‘நம்பர்–1’ பவுலராக உள்ள ரஷித் கான் (21 விக்.,) சென்னைக்கு எதிரான 3 போட்டிகளில் 6 விக்கெட் சாய்த்துள்ளார். சாகிப் அல் ஹசன் (14) இவருக்கு நல்ல கூட்டணி தருகிறார். ‘வேகத்தில்’ சித்தார்த் கவுல் (21 விக்.,) தொடர்ந்து மிரட்டுகிறார். புவனேஷ்வர் குமார் (9), சந்தீப் சர்மாவும் (11) இணைவதால் எதிரணிக்கு இலக்கு எட்டுவது பெரும் சிரமமாக உள்ளது.

ரூ. 26 கோடி பரிசு

ஐ.பி.எல்., தொடரில் இன்று கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 26 கோடி பரிசாக கிடைக்கும். பைனலில் தோற்கும் அணி ரூ. 13 கோடி பெறும். மற்றபடி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா ரூ. 9.7 கோடி தரப்படும்.

பைனலுக்கு கடந்து வந்த பாதை

சென்னை

* லீக் சுற்று

14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி

* ‘பிளே ஆப்’

தகுதிச்சுற்று 1ல் ஐதராபாத்தை வென்று பைனலுக்கு முன்னேற்றம்.

ஐதராபாத்

* லீக் சுற்று

14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி

* ‘பிளே ஆப்’

தகுதிச்சுற்று 1ல் சென்னையிடம் தோல்வி

தகுதிச்சுற்று 2ல் கோல்கட்டாவை வென்று பைனலுக்கு தகுதி.

ஆறு வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணி பங்கேற்ற 12 ஐ.பி.எல்., போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றது. 6ல் தோற்றது.

ஏழாவது முறை

அதிக ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்ற கேப்டன் வரிசையில் தோனி ‘நம்பர்–1’ ஆக உள்ளார். இவர் சென்னை அணிக்காக இன்று 7வது முறையாக பைனலில் பங்கேற்கிறார். 2017 பைனலில் புனே அணிக்காக சாதாரண வீரராக விளையாடினார்.

ஒன்பது முறை

சென்னை, ஐதராபாத் அணிகள் ஐ.பி.எல்., தொடரில் 9 முறை மோதின. இதில் சென்னை 7ல் வென்றது. 2ல் ஐதராபாத் வெற்றி பெற்றது. இத்தொடரில் இரு அணிகள் மோதிய 3 போட்டிகளிலும் சென்னை அணி வென்றது.

43 ரன்

சென்னை அணியின் ரெய்னா (4,957 ரன்) இன்னும் 43 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஐ.பி.எல்., தொடரில் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம். கோஹ்லி (4948) அடுத்த இடத்தில் உள்ளார்.

50வது விக்கெட்

சென்னை ‘சுழல்’ வீரர் ஹர்பஜன் சிங் இன்று 1 விக்கெட் சாய்த்தால், மும்பை வான்கடே மைதானத்தில் 50 ஐ.பி.எல்., விக்கெட் வீழ்த்திய வீரர் ஆகலாம்.

மழை வந்தால்

பைனல் நடக்கும் மும்பையில் வானம் 25 முதல் 44 சதவீதம் வரை மேகமூட்டமாக காணப்படும். மழை வர அதிகபட்சம் 7 சதவீதம் தான் வாய்ப்புள்ளது.

* ஒருவேளை மழை அல்லது வேறு காரணங்களுக்காக போட்டி நடக்கவில்லை எனில் ‘ரிசர்வ் டே’ கிடையாது. சூப்பர் ஓவரில் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்படும்.

* இதற்கும் வாய்ப்பில்லை எனில் புள்ளிப்பட்டியலில் முந்திய அணி அல்லது ‘பிளே ஆப்’ சுற்றில் பெற்ற வெற்றி அடிப்படையில் கோப்பை வெல்லும் அணி தேர்வு செய்யப்படும். இதன் படி தகுதிச்சுற்று 1ல் ஐதராபாத்தை வென்ற சென்னைக்கு அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.

‘டாடி ஆர்மி’

ஐ.பி.எல்., முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை வீரர்களின் சராசரி வயது 33. ‘வயதான அணி’ என சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். மறுநாள் 8 அறிமுகமற்ற வீரர்களை வாங்கியது சென்னை. சொந்தமண் பலமும் முதல் போட்டியுடன் கைவிட்டு போனது. சான்ட்னர், கேதர் ஜாதவ் விலகினர். இப்படி பல தடைகள் இருந்தும் சென்னை அணி பைனல் முன்னேறியது.

முன்னணி வீரர்களில் 11 பேர் 30 வயதுக்கும் மேல் இருக்க ‘டாடி ஆர்மி’ என கிண்டல் செய்தனர். பீல்டிங் சொதப்பும் என்பதற்கு மாறாக லீக் சுற்றில் ‘கேட்ச்’ எண்ணிக்கை 82.7 சதவீதம் (2வது சிறந்தது) ஆனது. ஜடேஜா, பிராவோ துல்லியமாக செயல்படுகின்றனர்.

இது தெரியுமா

19 வயதுக்குட்பட்டோருக்கான 2004 உலக கோப்பை தொடரில் ரெய்னாவுக்கு கேப்டனாக இருந்தவர் அம்பதி ராயுடு. இரு முறை சீனியர் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற ரெய்னா, சென்னை அணியின் முக்கிய வீரர். இம்முறை 15 இன்னிங்சில் 586 ரன்கள் குவித்த ராயுடுவும் முக்கிய வீரராகி விட்டார்.

2017ல் சொதப்பிய வாட்சன் மீண்டும் வந்தார். கடந்த சீசனில் அதிக பந்துகளை வீணடித்த தோனி (46.4 சதவீதம்) 2018ல் நல்ல முன்னேற்றம் (36.4) கண்டார். கடைசி கட்ட ஓவர்களில் இவர் சந்தித்த 148 பந்துகளில் 297 ரன்கள் (24 சிக்சர், 14 பவுண்டரி) விளாசினார்.

சர்வதேச அனுபவம் பெற்ற ஷர்துல் தாகூர் இருக்க, ‘சுவிங் மாஸ்டர்’ தீபக் சகார் தோனியின் ‘நம்பர்–1’ பவுலரானார். ‘பவர் பிளே’ ஓவர்களில் அதிக விக்கெட் (10) வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடம் இவருக்குத் தான். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு அசத்த ‘டாடி ஆர்மி’ என விமர்சிக்கப்பட்ட சென்னை இன்று ‘டாப் ஆர்மி’ ஆகப் போகிறது.

விதைகள் எறியப்பட்டால்...

பைனல் குறித்து சென்னை அணியின் ஹர்பஜன் சிங் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ விதைகள் கீழ்நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும். சென்னை மக்கள் ஐ.பி.எல்., தொடரில் எங்களை விதைகளாய் வித்திட்டனர். இன்று பைனலுக்கு சென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம். மெரினாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய் விடுமா,’ என தெரிவித்துள்ளார்.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 3 weeks ago | Report abuse
வெற்றி நமதே...சி எஸ் கே




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?