Advertisement


பிரெஞ்ச் ஓபன்: சாதிப்பாரா நடால்

மே 26, 2018.
 Comments  
 


French Open Tennis, Nadal, Serena
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. இதில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 11வது முறையாக பட்டம் வென்று சாதிக்கலாம்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று முதல் வரும் ஜூன் 10 வரை நடக்கவுள்ளது. இதில் நடால், ஜோகோவிச், செரினா, ஷரபோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

நடால் வாய்ப்பு: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் ‘நம்பர்–1’ மற்றும் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் ரபெல் நடால், கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் ‘சூப்பர் பார்மில்’ உள்ள இவர், இந்த ஆண்டு மான்டி–கார்லோ மாஸ்டர்ஸ், பார்சிலோனா மற்றும் இத்தாலி ஓபன் என, 3 முக்கிய தொடர்களில் கோப்பை வென்றுள்ளார். தவிர இவருக்கு இம்முறை சுலப சுற்றாக அமைந்திருப்பது சிறப்பம்சம். முதல் சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவை எதிர்கொள்ளும் ‘களிமண் ஆடுகள நாயகனான’ இவர், சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 11வது முறையாக கோப்பை வெல்லலாம்.

இம்முறை உலகின் ‘நம்பர்–2’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, காயம் காரணமாக பங்கேற்கவில்லை. செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் டேவிட் பெரர், ஜப்பானின் நிஷிகோரி, சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, ஜெர்மனியின் ஸ்வெரேவ் உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

மீண்டும் செரினா: பெண்கள் ஒற்றையரில் மூன்று முறை (2002, 2013, 2015) கோப்பை வென்றுள்ள அமெரிக்காவின் செரினாவுக்கு கடந்த செப்டம்பரில் பெண் குழந்தை பிறந்ததால், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். மீண்டும் போட்டிக்கு திரும்பும் இவர், முதல் சுற்றில் செக்குடியரசின் கிறிஸ்டினா பிலிஸ்கோவாவை சந்திக்கிறார். இவர், 4வது சுற்றில் இரண்டு முறை (2012, 2014) சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

உலகின் ‘நம்பர்–1’ ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ‘நம்பர்–2’ டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, ‘நம்பர்–3’ ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா, ஜெர்மனியின் கெர்பர் உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல போராடலாம்.

யூகி பாம்ப்ரி நம்பிக்கை

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் யூகி பாம்ப்ரி பங்கேற்கிறார். முதன்முறையாக பிரெஞ்ச் ஓபனில் விளையாடும் இவர், முதல் சுற்றில் சீனதைபேயின் யென்–ஹசன் லுவை எதிர்கொள்கிறார். மற்றொரு இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், தகுதிச் சுற்றோடு திரும்பினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி களமிறங்குகிறது.

பரிசு எவ்வளவு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு கோப்பையுடன் தலா ரூ. 17.36 கோடி பரிசு வழங்கப்படும். பைனல் வரை சென்று 2வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 8.84 கோடி கிடைக்கும்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?