Advertisement


ஜெயித்துக் காட்டிய மேற்கு ஜெர்மனி

மே 26, 2018.
 Comments  
 


FIFA World Cup Football 1990, Soccer, Germany
 

இத்தாலியில் 14வது உலக கோப்பை கால்பந்து தொடர் 1990ல் நடந்தது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. பரபரப்பான காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ அர்ஜென்டினா, யுகோஸ்லாவியா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. பின் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அர்ஜென்டினா 3–2 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

சாதனை முறியடிப்பு: அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதியில், இத்தாலியின் சிலாச்சி ஒரு கோல் அடித்து, தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இத்தொடரில் இத்தாலியின் பாதுகாப்பு அரணை தாண்டி எந்த அணியும் கோல் அடிக்க முடியவில்லை. மொத்தம் 517 நிமிடங்கள் தாக்குப்பிடித்த இச்சாதனையை அர்ஜென்டினாவின் கனிஜ்ஜியா முறியடித்தார். இவர் ஒரு கோல் அடிக்க, போட்டி 1–1 என சமன் ஆனது. பின், ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அர்ஜென்டினா அணி 4–3 என வென்று, பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி அணி, இங்கிலாந்தை வென்றது.

பழி தீர்த்தது: மீண்டும் அர்ஜென்டினா, மேற்கு ஜெர்மனி அணிகள் பைனலில் மோதின. எதிரணி வீரரை ‘பவுல்’ செய்த, பெட்ரோ மான்ஜோன், டிஜோட்டி வெளியேற்றப்பட, அர்ஜென்டினா 9 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது. 85வது நிமிடத்தில் பிரம்மி ஒரு கோல் அடிக்க, மேற்கு ஜெர்மனி 1–0 என வென்று, மூன்றாவது முறையாக(1954, 1974, 1990)  கோப்பை வென்றது. தவிர, கடந்த 1986ல் நடந்த பைனலில் அர்ஜென்டினாவிடம் சந்தித்த தோல்விக்கும் பழி தீர்த்தது.

இத்தொடரில் 6 கோல் அடித்த இத்தாலியின் சிலாச்சிக்கு ‘கோல்டன் ஷூ’ மற்றும் ‘கோல்டன் பால்’ விருது வழங்கப்பட்டது.

‘பிரீ கிக்’       

* ஜெர்மனியின் பெக்கன்பருக்கு ஒரு சிறப்பு உண்டு. 1974ல் கேப்டனாக இருந்து, அணிக்கு உலக கோப்பை பெற்றுத் தந்தார். பின், 1990ல் ஜெர்மனி அணிக்கு பயிற்சியாளராக இருந்து, கோப்பை வென்று அசத்தினார். கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இருந்து உலக கோப்பை கைப்பற்றிய ஒரே நபர் பெக்கன்பர் தான்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?