Advertisement


ரஷித் கானுக்கு சச்சின் புகழாரம்

மே 26, 2018.
 Comments  
 


Rashid Khan, Afghanistan Cricketer, Sachin
 

புதுடில்லி: ‘‘உலகின் தலைசிறந்த ‘டுவென்டி–20’ பவுலர் ரஷித் கான்,’’ என, இந்திய ஜாம்பவான் சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், 19. ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த சீசனில், 16 போட்டியில் 21 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய இவர், 10 பந்தில் 34 ரன் மற்றும் 4 ஓவரில், 3 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகனாக ஜொலித்தார். தவிர, ‘பீல்டிங்கில்’ மிரட்டிய இவர், 2 ’கேட்ச்’, ஒரு ‘ரன்–அவுட்’ செய்தார்.

ரஷித் கான் செயல்பாடு குறித்து இந்திய ஜாம்பவான் சச்சின், ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ரஷித் கான் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் இப்போது இவரை, ‘டுவென்டி–20’ போட்டிகளில் உலகின் தலைசிறந்த ‘சுழல்’ வீரர் எனக் கூறுவதில் எவ்வித தயக்கமும் இல்லை. இவரிடம் ‘பேட்டிங்’ திறமையும் இருப்பது சிறப்பம்சம்,’’ என தெரிவித்திருந்தார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?