Advertisement


கோல்கட்டா தோல்வி ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம்

மே 26, 2018.
 Comments [1]  
 


IPL T20 Cricket, Kolkata, Dinesh Karthik
 

கோல்கட்டா: ‘‘ஐதராபாத்துக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றில் நிதிஷ் ராணாவின் ‘ரன்–அவுட்’ தோல்விக்கு வித்திட்டது,’’ என, கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான 2வது தகுதிச் சுற்றில் கோல்கட்டா அணி, 14 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்து, பைனல் வாய்ப்பை கோட்டைவிட்டது. கோல்கட்டா அணி ஒரு கட்டத்தில், 87/1 என வலுவான நிலையில் இருந்த போது நிதிஷ் ராணா, ‘ரன்–அவுட்’ ஆனார். அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, கேப்டன் கார்த்திக், ஆன்ட்ரி ரசல் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இச்சரிவிலிருந்து மீள முடியாமல் தவித்த கோல்கட்டா அணி தோல்வியை தழுவியது.

இதுகுறித்து கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியது: ஐ.பி.எல்., பைனலுக்கு முன்னேற முடியாமல் போனது வருத்தம். இப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் நிதிஷ் ராணா ‘ரன்–அவுட்’ ஆனது திருப்பமாக அமைந்தது. ஒருவேளை இவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் நெருக்கடியின்றி விளையாடி வெற்றி பெற்றிருப்போம். தவிர, ராபின் உத்தப்பாவின் ‘பார்ம்’ ஏமாற்றம் தந்தது.

இம்முறை லீக் சுற்றில் மோதிய இரண்டு போட்டியிலும் ரஷித் கானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆனால் தகுதிச் சுற்றில் துல்லியமாக பந்துவீசிய இவர், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி நெருக்கடி தந்தார்.

கோல்கட்டாவுக்காக ஒரு அணியாக இணைந்து விளையாடியதை என்றும் மறக்க முடியாது. சுப்மன் கில், பிரசித், நிதிஷ் ராணா போன்ற இளம் வீரர்களை கண்டறிய முடிந்தது. இவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
pallipalayamkoilraj 4 weeks ago | Report abuse
தினேஷ் கார்த்திக் சொல்வது 100 % சரி .எப்பவுமே கேப்டன்கள் எல்லா மேட்சிலும் உயிரை கொடுக்கமுடியாது .இதனை புரிந்துகொண்டு மற்றவர்கள் விளையாட வேண்டும் .ஓடி ரன் எடுக்காததால்,அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸு தோல்விக்கு காரணம் .இப்போது ஒரு வியாதி உள்ளது யாரும் ஓடி ரன் எடுக்க விரும்புவது இல்லை .இருந்த இடத்தில 4 ரன்கள் ரங்கள் ,6 ரன்கள் எடுக்கவே விரும்புகிறார்கள் .இதனால் அவுட் அகி விடுகிறார்கள் .20 ஓவரில் அப்படித்தான் விளையாடவேண்டும் என்றாலும் .வெற்றி லெவலுக்கு ஓடி ரன்கள் எடுக்கலாம் .ராபின் உத்தப்பா ,மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சரி யாக விளையாடவில்லை இதனால் கொல்கொதா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி ஆனது .




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?