Advertisement


இரண்டு காதலிகளை மணக்கும் ரொனால்டினோ

மே 25, 2018.
 Comments [2]  
 


Ronaldinho to marry two women at the same time
 

புதுடில்லி:  பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ, 38, இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

இவர் சிறந்த வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ (2005) விருது வென்றவர். தேசிய அணிக்காக 97 போட்டிகளில் (1999–2013) 33 கோல்கள், கிளப் அணிகளுக்காக 441 போட்டிகளில் 167 கோல்கள் அடித்துள்ளார். 2002ல் உலக கோப்பை வென்ற பிரேசில் அணியில் இடம் பெற்றவர்.

பிரிஸ்சில்லா கோயல்லோ என்ற பெண்ணை காதலித்தார். 2016ல் பியாட்ரிஸ் சவுசா என்ற பெண்ணுடனும் நட்பு ஏற்பட்டது. இருவரிடம் ஒரே நேரத்தில் பழகி வந்தார். இருவரிடமும் தனது காதலை தெரிவித்து மோதிரங்கள் மாற்றிக் கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ரூ. 34 கோடி மதிப்புள்ள மேன்சனில் தனது காதலிகளுடன் குடியேறினார். வரும் ஆகஸ்ட் மாதம் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.

பெரிய பொய்

ரொனால்டினோ கூறுகையில்,‘‘ பத்திரிகையில் வெளியான செய்தியை பார்த்து விட்டு ஒட்டுமொத்த உலகமும் என்னிடம் விளக்கம் கேட்கத் துவங்கி விட்டது. அப்படி திருமணம் செய்யப் போவதில்லை. இது மிகப்பெரிய பொய்,’’ என்றார்.

பல் அழகா...

ரொனால்டினோவின் பல் அமைப்பு எளிறு தெரியும்படி இருக்கும். இதற்கு ரசிகைகள் மத்தியில் மவுசு அதிகமாக இருந்தது. சமீபத்தில் இவர், அழகு சிகிச்சை மூலம் எளிறு அதிக அளவில் தெரியாதபடி பல் ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். இதனால் ஏமாற்றமடைந்த இவரது ரசிகைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
jagadala pratapan 4 weeks ago | Report abuse
ronaaldinhO கால் பந்தாக மாறி ப்ரேசில்லாவும் பேட்டரிஸும் அதை உதைத்து விளையாட வாழ்த்துக்கள். மச்சமைய்யா


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
MS 4 weeks ago | Report abuse
திருமணத்திற்கு பின் அவர்கள் இரு அணிகளாகி இவரை பந்தாக்கி விளையாடுவார்கள். இதைத்தான் நாம் வெச்சி செய்யறதுன்னு சொல்றோம்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?