Advertisement


கவுன்டி: கோஹ்லி விலகல்

மே 24, 2018.
 Comments [2]  
 


kohli
 

புதுடில்லி: இந்திய அணி கேப்டன் கோஹ்லி, காயம் காரணமாக கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகளிலிருந்து விலகினார்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 3 ‘டுவென்டி–20’, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் ஜூலை 3ல் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 1ல் பர்மிங்காமில் துவங்குகிறது.

டெஸ்ட் தொடரில் சாதிப்பதற்காக, இந்திய அணி கேப்டன் கோஹ்லி, இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்காக, சர்ரே அணியில் இணைய முடிவு செய்தார். இந்நிலையில், இவரின் கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக 3 வாரம் தேவைப்படும் என்பதால், கவுன்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகினார். ஓய்வுக்குப்பின், ஜூன் 15ம் தேதி உடற்தகுதி தேர்வு செய்யப்பட உள்ளது. இதன் அடிப்படையில், இங்கிலாந்து தொடரின் முதல் பாதியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

பங்கேற்க மாட்டார்

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தற்காலிக செயலர் அமிதாப் சவுத்ரி கூறுகையில்,‘‘ கடந்த 17ம் தேதி ஐதராபாத்துக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி சார்பில் கேப்டன் கோஹ்லி பங்கேற்றார். அப்போது, ‘பீல்டிங்’ செய்தபோது, கோஹ்லியின் கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து, பி.சி.சி.ஐ., மருத்துவ குழு சோதித்தது. காயம் குணமாக 3 வாரம் தேவைப்படும் என கூறி உள்ளது. இதனால், கவுன்டி போட்டிகளில் கோஹ்லி பங்கேற்க மாட்டார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கு முன் உடற்தகுதி பெற்றுவிடுவார் என மருத்துவ குழு நம்பிக்கை அளித்துள்ளது,’’ என்றார்.

தொடர் போட்டி காரணமா

விராத் கோஹ்லி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது சுமையை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இவர், 9 டெஸ்ட், 29 ஒரு நாள், 9 ‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இது தவிர, பெங்களூரு சார்பில் (14 போட்டி) ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றார். இப்படி இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடியதும் காயத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   1  
binakam 4 weeks ago | Report abuse
வெட்டி பேச்சு, உலக தரம் ABDE v யெ வைத்தும் ஜெயிக்க வக்கில்லை. சபதமாம், சபதம் .


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   1  
LAX 4 weeks ago | Report abuse
அப்பாடா.. அப்புடியே எல்லா போட்டிகள்லேர்ந்தும் விலகிடு..




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?