Advertisement


‘பிபா’ உலக கோப்பை: பீலே ‘ஹாட்ரிக்’ சாதனை

மே 18, 2018.
 Comments  
 


fifa soccer ground
 

ஆறாவது உலக கோப்பை கால்பந்து தொடர், 1958ல் சுவீடனில் நடந்தது. இதன் தகுதிச் சுற்றுப் போட்டிகளில், 58 நாடுகள் பங்கேற்றன. இதில் முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, உருகுவே அணிகள் தோல்வி அடைந்து வெளியேறின. பிரேசில் அணியில் பீலே அறிமுகமானார்.

மொத்தம் 16 அணிகள் முதல் சுற்றில் மோதின. இதில் சிறப்பாக செயல்பட்ட மேற்கு ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ், பிரேசில் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் பிரேசில் அணி, 5–2 என்ற  கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. இதில், பிரேசிலின் பீலே தொடர்ந்து மூன்று கோல் அடித்தார். இதன்மூலம் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த இளம் வீரர்(17 வயது, 244 நாட்கள்) என்ற பெருமை பெற்றார்.

மற்றொரு அரையிறுதியில் சுவீடன் அணி, 3–1 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை தோற்கடித்து பைனலுக்கு தகுதி பெற்றது. பைனலில் பங்கேற்ற மிக இளம் வயது வீரரான பீலே, 2 கோல் அடிக்க, பிரேசில் அணி, 5–2 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி, முதன்முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது.

‘பிரீ கிக்’

இத்தொடரில், 60 வீரர்கள் இணைந்து மொத்தம் 126 கோல் அடித்தனர். இதில் பிரான்ஸ் வீரர் ஜஸ்ட் பான்டைன், அதிகபட்சமாக 13 கோல் அடித்தார். இதன்மூலம் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், ஒரு சீசனில் அதிக கோலடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?