Advertisement


சாதிக்குமா பெங்களூரு

மே 18, 2018.
 Comments  
 


kohli
 

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், வெல்லும் அணிக்கு ‘பிளே ஆப்’ வாய்ப்பு அதிகம்

இதுவரை 4 அரைசதம் உட்பட 526 ரன் எடுத்த கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ் (427), மன்தீப் சிங் (249) பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர். பார்த்திவ் படேல் (120) பெரியளவில் சோபிக்கவில்லை. பின்வரிசையில் சர்பராஸ் கான் சற்று வேகம் காட்டுகிறார். பவுலிங்கில் 17 விக்கெட் சாய்த்த உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ நம்பிக்கை தருகிறார். முகமது சிராஜ் (10) ரன்களை வாரி வழங்குகிறார். ‘சுழல்’ வீரர் சகால் 13 போட்டியில் 12 விக்கெட் மட்டும் வீழ்த்தியது பெங்களூரு அணிக்கு பின்னடைவு தான்.

ராஜஸ்தான் எப்படி

 ராஜஸ்தான் அணி 13 போட்டியில் 6ல் (12 புள்ளி) வென்றது. ரன்ரேட் –0.403 என குறைவாக உள்ளது பலவீனம். இன்றைய போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் அல்லது குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும்.

கடைசியாக களமிறங்கிய 6 போட்டிகளில் துவக்க வீரர் பட்லர் (548 ரன்) 5ல் அரைசதம் அடிக்க, சஞ்சு சாம்சன் (391), கேப்டன் ரகானே (291) தங்கள் பங்கிற்கு கைகொடுக்கின்றனர். கடைசி நேரங்களில் திரிபாதி, கவுதம் ரன் சேர்க்க உதவுகின்றனர்.

பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரூ. 11.5 கோடிக்கு வாங்கப்பட்ட உனத்கட் 13 போட்டியில் 9 விக்கெட் மட்டும் கைப்பற்றி ஏமாற்றம் தருகிறார். ‘சுழலில்’ இஷ் சோதி, ஸ்ரேயாஸ் கோபால் ஆறுதல் தருகிறார்.

* இன்று இரவு நடக்கும் லீக் போட்டியில் 14 புள்ளிகள் பெற்ற கோல்கட்டா கடைசி போட்டியில் ஐதராபாத்தை (18) எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வென்றால் 16 புள்ளியுடன், கோல்கட்டா ‘பிளே ஆப்’ செல்லலாம்.  தோற்றால் மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு சென்று விட்ட ஐதராபாத் அணிக்கு இப்போட்டி பயிற்சிக்களமாக அமையலாம்.

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?