Advertisement


‘பிளே–ஆப்’ வாய்ப்பு யாருக்கு

மே 18, 2018.
 Comments  
 


ipl
 

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்ய பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் 11வது ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஐதராபாத், சென்னை அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைந்துவிட்டன. மற்ற இரண்டு இடங்களுக்கு பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, கோல்கட்டா அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

* பெங்களூரு அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற முதலில் இன்று ராஜஸ்தானை வீழ்த்த வேண்டும். மற்ற போட்டிகளில் மும்பை (எதிர்– டில்லி), கோல்கட்டா (எதிர்– ஐதராபாத்) அணிகள் தோற்பது அவசியம். ஒருவேளை, பெங்களூரு தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

* மும்பை அணியை பொறுத்தவரை நாளை டில்லியை வீழ்த்த வேண்டும். அதே நேரம் கோல்கட்டா அணி, ஐதராபாத்திடம் தோற்பது அவசியம். மறுபுறம் மும்பை வீழ்ந்தால் லீக் சுற்றுடன் திரும்ப நேரிடும்.

* கோல்கட்டா அணிக்கு இன்றைய போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தினாலே போதும். முடிவு எதிர்மாறாக இருந்தால், ராஜஸ்தான் அணி குறைந்த வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்க்க வேண்டும்.

* ராஜஸ்தான் அணி வென்றாலும் ‘பிளே–ஆப்’ சுற்று உறுதி இல்லை. மற்ற அணிகளின் முடிவு பொறுத்துதான் வாய்ப்பு இருக்கும். ஒருவேளை தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

* பஞ்சாப் அணியின் வாய்ப்பை பொறுத்தவரை, சென்னையை அதிக வித்தியாசத்தில் வீழ்த்துவது அவசியம். தவிர, மும்பை, கோல்கட்டா அணிகள் தங்களது போட்டியில் தோற்க வேண்டும்.

‘ரன் ரேட்’ எப்படி

‘பிளே ஆப்’ செல்ல ரன் ரேட் மிக முக்கியம். இதை கீழ்க்கண்ட படி கணக்கிடலாம்.

ரன்ரேட்= எடுத்த ரன்/சந்தித்த ஓவர்–எதிரணி எடுத்த ரன்/வீசிய ஓவர்

அதாவது பெங்களூரு அணி இதுவரை 13 போட்டியில் 244.4 ஓவர்களில் 2188 ரன்கள் எடுத்தது. எதிரணிக்கு 255.4 ஓவர்களில் 2219 ரன்கள் விட்டுத்தந்தது.இதன் படி 2188/244.4–2219/255.4=+0.264 என, வரும்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?