Advertisement


பி.சி.சி.ஐ., முடிவு: ஹர்பஜன் எதிர்ப்பு

மே 18, 2018.
 Comments  
 


Harbhajan Singh
 

புதுடில்லி: ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்டில் களமிறங்க இந்திய அணி மறுத்தது தவறு. ‘பிங்க்’ நிற பந்தில் விளையாடுவதில் என்ன தயக்கம் உள்ளது,’’ என இந்திய ‘சுழல்’ வீரர் ஹர்பஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

வரும் நவம்பரில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 3 ‘டுவென்டி–20’, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி பிரிஸ்பேனில் நவம்பர்21ல் நடக்கவுள்ளது.முதல் டெஸ்டை(டிச.6–10, அடிலெய்டு)பகலிரவு ஆட்டமாக நடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு விரும்பியது. இதற்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது.

இது குறித்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் கூறியது: இந்திய அணி எதற்காக பகலிரவு டெஸ்டில் களமிறங்க மறுக்கிறது. இது ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ‘பிங்க்’ நிற பந்தில் விளையாடுவதில் என்ன பயம். டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றபோது, எஸ்.ஜி., பந்தில் மட்டும் விளையாடினோம். பின், படிப்படியாக ‘குக்கபுரா, டக்ஸ்’ பந்துகளில் பவுலிங் வீச கற்றுக் கொண்டோம். இதைப்போல, ‘பிங்க்’ நிற பந்தில் ஒரு முறை விளையாடி விட்டால் சரியாகிவிடும்.

தயக்கம் வேண்டாம்

நமது அணியிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இவர்களை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி தரலாம். நமது பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய ‘வேகத்தை’ எதிர் கொள்ள ஏன் மறுக்கின்றனர். இங்கிலாந்து மண்ணில், அவர்களின் ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாட முடியாது என கூற முடியுமா. பின், எதற்காக ‘பிங்க்’ நிற சவாலை எதிர்கொள்ள தயங்க வேண்டும். நமது மண்ணில் பனிக்காலத்தை தவிர மற்ற நேரங்களில் இம்மாதிரியான போட்டிகளில் பங்கேற்று பார்க்கலாம். இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?