Advertisement


டில்லி அணியிடம் வீழ்ந்தது சென்னை

மே 18, 2018.
 Comments  
 


chennai team
 

டில்லி: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘பேட்டிங்கில்’ சொதப்பிய சென்னை அணி, 34 ரன் வித்தியாசத்தில், 5வது தோல்வியை பதிவு செய்தது. அபாரமாக ஆடிய அம்பதி ராயுடுவின் அரைசதம் வீணானது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. சென்னை அணியில் வில்லே நீக்கப்பட்டு லுங்கிடி சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் ஜேசன் ராய், ஜூனியர் டாலாவுக்கு பதிலாக மேக்ஸ்வெல், அவேஷ் கான் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ரிஷாப் அபாரம்

டில்லி அணிக்கு பிரித்வி ஷா (17) சுமாரான துவக்கம் தந்தார். தீபக் சகார் வீசிய 5வது ஓவரில், 2 பவுண்டரி விளாசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரவிந்திர ஜடேஜா பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ரிஷாப் பன்ட், ஹர்பஜன் வீசிய 10வது ஓவரில், 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது லுங்கிடி வீசிய 11வது ஓவரில் ஸ்ரேயாஸ் (19), ரிஷாப் பன்ட் (38) அவுட்டாகினர்.

மேக்ஸ்வெல் (5), அபிஷேக் சர்மா (2) ஏமாற்றினர். ஷர்துல் தாகூர், பிராவோ பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார் விஜய் சங்கர். பிராவோ வீசிய கடைசி ஓவரில், ஹர்ஷல் படேல், 3 சிக்சர் அடிக்க, 26 ரன் கிடைத்தது.

டில்லி அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 162 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் (36), ஹர்ஷல் படேல் (36) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் லுங்கிடி, 2 விக்கெட் கைப்பற்றினார்.

ராயுடு அரைசதம்

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன், அம்பதி ராயுடு ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த போது அமித் மிஸ்ரா ‘சுழலில்’ வாட்சன் (14) சிக்கினார். அவேஷ் கான் வீசிய 6வது ஓவரில், 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ராயுடு, அமித் மிஸ்ரா வீசிய 9வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஹர்ஷல் படேல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராயுடு (50), அரைசதமடித்தார். ரெய்னா (15) சோபிக்கவில்லை. அமித் மிஸ்ரா பந்தில் சாம் பில்லிங்ஸ் (1) அவுட்டானார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா, சந்தீப் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். பவுல்ட் ‘வேகத்தில்’ கேப்டன் தோனி (17) வெளியேறினார்.

கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 39 ரன் தேவைப்பட்டது. பவுல்ட் வீசிய 20வது ஓவரின் 2வது பந்தில் பிராவோ (1) அவுட்டானார். இந்த ஓவரில் 4 ரன் மட்டுமே கிடைத்தது. சென்னை அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 128 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜடேஜா (27), தீபக் சகார் (1) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

3000

அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு, ஐ.பி.எல்., அரங்கில் 3000 ரன்களை எட்டினார். இதுவரை இவர், 127 போட்டியில், ஒரு சதம், 17 அரைசதம் உட்பட 3001 ரன்கள் குவித்துள்ளார். இதில் மும்பை அணிக்காக 114 போட்டியில், 2416 ரன்களும், சென்னை அணிக்காக 13 போட்டியில், 585 ரன்களும் எடுத்துள்ளார். இதன்மூலம், ஐ.பி.எல்., வரலாற்றில் 3000 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த 15வது வீரரானார்.

6000

சென்னை அணி கேப்டன் தோனி, தனது 10வது ரன்னை எட்டிய போது ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில் 6000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 290 போட்டியில், 6007 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 6வது இந்திய வீரரானார். ஏற்கனவே ரெய்னா, கோஹ்லி, ரோகித் சர்மா, காம்பிர், ஷிகர் தவான் இச்சாதனை படைத்திருந்தனர்.

600

டில்லி அணியின் ரிஷாப் பன்ட், தனது 18வது ரன்னை எட்டிய போது, இந்த சீசனில் 600 ரன்கள் எடுத்த 3வது வீரரானார். இதுவரை இவர், 13 போட்டியில், ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 620 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே லோகேஷ் ராகுல் (652 ரன்), வில்லியம்சன் (625) இம்மைல்கல்லை எட்டினர்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?