Advertisement


சென்னை அணி ஆதிக்கம் தொடருமா: டில்லியுடன் மோதல்

மே 17, 2018.
 Comments  
 


dhoni
 

புதுடில்லி: இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில், டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்ரேயாஸ் கேப்டனாக உள்ள டில்லியை எதிர்கொள்கிறது. இரு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கிய சென்னை அணி, இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில், 8ல் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன், ‘பிளே ஆப்’ சுற்றுக்கு சென்று விட்டது.

தவிர, இதுவரை களமிறங்கிய அனைத்து சீசன்களிலும் (9) அடுத்த சுற்றுக்கு முன்னேறி சாதித்த ஒரே அணியாக சென்னை திகழ்கிறது. பேட்டிங்கில், ‘சீனியர்’ வாட்சன் (424 ரன்), தொடர்ந்து கைகொடுக்கிறார். மீண்டும் துவக்க வீரராக வாய்ப்பு பெற்ற அம்பதி ராயுடு (535), சதம் அடித்து மிரட்டினார். இவரது சராசரி 48.63 ரன்னாக உள்ளது.  இது இன்றும் தொடரலாம். ‘ஆல் ரவுண்டர்’ பிராவோ (133 ரன், 9 விக்.,) இருப்பது சற்று பலம் தான்.

ரெய்னா தடுமாற்றம்

பங்கேற்ற அனைத்து தொடரிலும் குறைந்தது 400 ரன்களை எட்டி விடும் ரெய்னா (315 ரன்), இம்முறை தொடர்ந்து தடுமாறுகிறார். கேப்டன் தோனியும் (413 ரன், சராசரி 103.25) தன் பங்கிற்கு உதவுகிறார். பவுலிங்கில் ஷர்துல் தாகூர் (11 விக்.,), தீபக் சகார் (7) கூட்டணி நம்பிக்கை தருகிறது. சுழற்பந்து வீச்சில் ஜடேஜா (7), ஹர்பஜன் சிங் (7) இன்னும் சிறப்பாக செயல்பட்டால் நல்லது.

பன்ட் பலம்

டில்லி அணியை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் 3 ல் மட்டும் வென்று (9 தோல்வி), அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இருப்பினும், இன்று ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கலாம். இதற்கு, கேப்டன் ஸ்ரேயாஸ் (386 ரன்), இளம் ‘புயல்’ ரிஷாப் பன்ட் (582) பேட்டிங் உதவும் எனத் தெரிகிறது. அதேநேரம், இவர்களைத் தவிர, பிரித்வி ஷா (216), விஜய் ஷங்கர் (133) என, பலரும் பெரியளவில் சோபிக்காதது ஏமாற்றம் தான்.

பவுல்ட் ஆறுதல்

பவுலிங்கில், இதுவரை 15 விக்கெட் சாய்த்த, டிரன்ட் பவுல்ட் மட்டும் ஆறுதல் தருகிறார். ‘சுழலில்’ அமித் மிஸ்ரா (7), டிவாட்யா (6), அவேஷ் கான் (4) என, பலர் இருந்த போதும், எதிரணி ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாதது சோகம் தான்.

யார் ஆதிக்கம்

சென்னை, டில்லி அணிகள் இதுவரை, 17 போட்டிகளில் மோதின. இதில், சென்னை அணி 12ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 5 போட்டியில் மட்டும் டில்லி வென்றது.

* தவிர, பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த 5 போட்டிகளில், சென்னை அணி 4ல் வெற்றி பெற்றது, சாதகமாக உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?