Advertisement


பிபா கவுன்ட் டவுண்: மேற்கு ஜெர்மனி அபாரம்

மே 17, 2018.
 Comments  
 


west germany team
 

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தலைமையிடமான சுவிட்சர்லாந்தில் ஐந்தாவது உலக கோப்பை கால்பந்து தொடர், 1954ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. ஆசிய அணிகளில் கொரியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இத்தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் ‘ரவுண்ட்–ராபின்’ முறையில் நடத்தப்பட்டன. காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல் போட்டிகள் ‘நாக்–அவுட்’ முறையில் நடைபெற்றன. லீக் சுற்றில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன.

இத்தாலி அதிர்ச்சி

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற பிரேசில், யுகோஸ்லேவியா, ஹங்கேரி, மேற்கு ஜெர்மனி, உருகுவே, ஆஸ்திரியா, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ், இத்தாலி அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறி பெரும் ஏமாற்றம் அளித்தன.

காலிறுதிப் போட்டிகளின் முடிவில், ஹங்கேரி, உருகுவே, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில், ஹங்கேரி (4–2) உருகுவே அணியையும், மேற்கு ஜெர்மனி (6–1) ஆஸ்திரியாவையும் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறின.

பரபரப்பான மோதல்

பரபரப்பாக நடந்த பைனல் போட்டியில், ஹங்கேரி, மேற்கு ஜெர்மனி அணிகள் கோப்பை வெல்ல போராடின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. பின்னர் கூடுதல் நேரத்தில் ரான், ஒரு கோல் அடிக்க, 3–2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி முதன்முறையாக மேற்கு ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை ஹங்கேரி பெற்றது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஆஸ்திரியா (3–1) உருகுவே அணியை வீழ்த்தியது. ஹங்கேரி அணியின் சண்டோர் காக்சிஸ் 11 கோல்கள் அடித்து ‘கோல்டன் ஷூ’ கைப்பற்றினார்.

Advertisement

சென்னை vs ஹைதராபாத் , இறுதி
இந்திய பிரீமியர் லீக், 2018
5/27/2018 , 19:00
வான்கெடே ஸ்டேடியம், மும்பை

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?