Advertisement


சிக்கலில் போகத் சகோதரிகள்

மே 17, 2018.
 Comments  
 


babita
 

புதுடில்லி: ஆசிய விளையாட்டிற்கான பயிற்சி முகாமில் பங்கேற்காத போகத் சகோதரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு (ஆக. 18–செப். 2) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த நட்சத்திரங்களுக்கான பயிற்சி முகாம் லக்னோவில் நடக்கிறது. இந்த முகாமில் ‘போகத்’ சகோதரிகள் கீதா மற்றும் பபிதா, ரீத்து, சங்கீதா என, நான்கு பேரும் பங்கேற்கவில்லை. இதையடுத்து, ஆசிய விளையாட்டு தகுதிச்சுற்று பட்டியலில் இருந்து இவர்களது பெயரை, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) அதிரடியாக நீக்கியது.

இதனால், காமன்வெல்த்தில் இரு முறை (2014, 2018) தங்கம் வென்ற பபிதா, கீதா (2010ல் தங்கம்) உள்ளிட்டோர், ஆசிய விளையாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விளக்கம் வேண்டும்

இது குறித்து டபிள்யு.எப்.ஐ., தலைவர் பிரிஜ் பூஷன் கூறுகையில்,‘‘ பபிதா, கீதா போகத் உள்ளிட்ட 13 பேர், முகாமிற்கு வரவில்லை. இது மோசமான செயல். மீண்டும் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பினால், உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்,’’ என்றார்.

காரணம் என்ன

பபிதா குமாரி கூறுகையில்,‘‘ எனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயிற்சி முகாமில் பங்கேற்க இயலவில்லை. இது குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விளக்கம் கேட்டால், பதில் அளிக்கப்படும். சகோதரி கீதா பெங்களூருவில் தனியாக பயிற்சியில் ஈடுபடுகிறார்,’’ என்றார்.

..............

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?