Advertisement


மும்பை அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப்

மே 16, 2018.
 Comments [1]  
 


pollard, mumbai
 

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த லீக் 50வது லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்‘ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

போலார்டு அரைசதம்

கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய, மும்பை அணிக்கு எவின் லீவிஸ் (9) ஏமாற்றினார். சூர்யகுமார் யாதவ் (27), இஷான் கிஷான் (20) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா (6) ஏமாற்றினார். ஸ்டாய்னிஸ் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய குர்னால் பாண்ட்யா (32) நம்பிக்கை தந்தார். போலார்டு, 22 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின் ‘சுழலில்’  போலார்டு (50), பென் கட்டிங் (4) சிக்கினர். ஹர்திக் பாண்ட்யா (9) நிலைக்க வில்லை. மும்பை அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 186 ரன்கள் எடுத்தது. மார்க்கண்டே (7), மெக்லீனகன் (11) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஆன்ட்ரூ டை,4 விக்கெட் கைப்பற்றினார்.

ராகுல் அசத்தல்

பின், களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கெய்ல் (18) ஏமாற்றினார். லோகேஷ் ராகுல், பின்ச் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. குர்னால் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த ராகுல் அரை சதம் எட்டினார். பும்ரா ‘வேகத்தில்’ பின்ச் (46) ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் ஒரு ரன்னில் திரும்பினார். இருப்பினும், அதிரடியை தொடர்ந்த ராகுல், பென் கட்டிங் பந்து வீச்சில் மூன்று பவுண்டரி விளாசினார். ஆனால், அடுத்த ஓவரை வீசிய பும்ரா பந்தில் ராகுல் (94) சிக்க, பஞ்சாப் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகினர். மெக்லீனகன் வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. 3வது பந்தில் யுவராஜ் (1) அவுட்டானார். இதில் மொத்தமே 13 ரன் மட்டுமே கிடைக்க, பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. அக்சர் (10), மனோஜ் திவாரி (4) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், மும்பை அணி ‘பிளே–ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
grenvalley 2 weeks ago | Report abuse
ப்ரீத்தி ஜிந்தா பாவம்,நல்லா ஏமாத்திபுட்டாய்ங்க ,tye,rahul தவிர மத்த எல்லோரும் க்ளப் கிரிக்கெட் ஆடக்கூட லாயக்கில்லாத ஆளுங்க நம்மூர்,அஸ்வினையும் சேத்துத்தான்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?