Advertisement


பொங்கி எழுமா பெங்களூரு

மே 16, 2018.
 Comments  
 


virat kohli
 

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று பெங்களூருவில் நடக்கவுள்ள லீக் போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி இதுவரை 12 போட்டியில் 5ல் மட்டுமே  பெற்றி பெற்றுள்ளது இன்று வென்றால் மட்டுமே, ‘பிளே–ஆப்’ வாய்ப்பில் நீடிக்க முடியும். அணியின் முதுகெலும்பாக கேப்டன் கோஹ்லி (514 ரன்), டிவிலியர்ஸ் (358) திகழ்கின்றனர். குயின்டன், பார்த்திவ் தவிர வேறு எந்த ஒரு வீரரும் அரை சதம் கூட அடிக்கவில்லை. மன்தீப், மொயீன் உள்ளிட்டோர் சுதாரித்தால் நல்லது. பவுலிங்கை பொறுத்தவரை உமேஷ் (17 விக்), சகால் (11) மட்டுமே 10 விக்கெட்டை தாண்டி உள்ளனர். சிராஜ், வோக்சின் அபார வேகம் அணிக்கு நன்மை சேர்க்க வேண்டும்.

மிரட்டும் இருவர்

ஐதராபாத் ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைந்துவிட்டது. துவக்க வீரர் ஹேல்ஸ், ஐந்து போட்டியில் அதிகபட்சமாக 45 ரன்தான் எடுத்துள்ளார். ஷிகர் தவான், கேப்டன் வில்லியம்சன் ‘பார்ம்’ அபாரமாக உள்ளது. கடந்த இரண்டு போட்டியிலும் அரை சதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தனர். மணிஷ் பாண்டே, யூசுப் பதான், சாகிப் என சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ளும் வீரர்களும் அச்சுறுத்தவே செய்கின்றனர்.

அணியின் பலமே பந்துவீச்சுதான். ‘வேகத்தில்’ புவனேஷ்வர், சித்தார்த் கவுலும், ‘சுழலில்’ ரஷித், சாகிப்பும் துாள் கிளப்புகின்றனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?