Advertisement


வரம் தந்த வார்ன்: குல்தீப் பெருமிதம்

மே 16, 2018.
 Comments  
 


kuldeep
 

கோல்கட்டா: ‘‘ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் வார்னை, ‘ரோல் மாடலாக’ வைத்துள்ளேன். இவர் போட்டியை நேரடியாக பார்த்ததால் கிடைத்த ஊக்கம்தான் ராஜஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட காரணம்,’’ என, கோல்கட்டா சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதின. இதில், குல்தீப், 4 விக்கெட் வீழ்த்த, ராஜஸ்தான் 19 ஓவரில் 142 ரன்கள் மட்டும் எடுத்தது. பின், களமிறங்கிய கோல்கட்டா அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இத்தொடரில் முதல் முறையாக அதிக விக்கெட் வீழ்த்தியது (4) குறித்து ‘சைனாமேன் சுழல்’ பவுலரான குல்தீப் கூறியது:

ராஜஸ்தானின் பட்லரை அவுட்டாக்கியதை ‘ஸ்பெஷலாக’ கருதுகிறேன். ஏனெனில், இவர் இன்னும் சில ஓவர் நின்றிருந்தால் ‘ஸ்கோர்’ அதிகமாகி இருக்கும். இவரை ஆட்டமிழக்க செய்தது, திருப்புமுனையாக அமைந்தது.

ஊக்கம் கிடைத்தது

ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் வார்னின் தீவிர ரசிகன். எனது கிரிக்கெட் வாழ்வில் இவரைத்தான் ‘ரோல் மாடலாக’ கொண்டுள்ளேன். ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக வார்ன் உள்ளார். இந்த அணிக்கு எதிராக விளையாடும்போது, இவரும் போட்டியை நேரடியாக பார்த்தார். இவருக்கு முன்னால் விளையாடும்போது ஊக்கமாக இருந்தது. வார்னின் பார்வையில் சிறப்பாக செயல்பட எண்ணினேன். இதனால்தான், 4 விக்கெட் வீழ்த்த முடிந்தது. இப்போட்டி முடிந்ததும் வார்னிடம் பேசினேன்.

தாக்குதல் பாணி

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவரில் 43 ரன்கள் விட்டுத்தந்தது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். என்னைப்பொறுத்தவரை, ரன்களை அதிகமாக வழங்குவதை விட விக்கெட் வீழ்த்துவதில்தான் கவனம் செலுத்துவேன். பேட்ஸ்மேன்களுக்கு தாக்குதல் பாணியில் பந்துவீசி, விக்கெட் கைப்பற்றுவேன். இவ்வாறு குல்தீப் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?