Advertisement


பிபா கவுன்ட் டவுண்: இந்தியா புறக்கணிப்பு பின்னணி

மே 16, 2018.
 Comments  
 


Uruguay soccer team
 

இரண்டாம் உலகப் போர் காரணமாக, 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், நான்காவது உலக கோப்பை தொடர், 1950ல் பிரேசிலில் நடந்தது. முதன் முறையாக ‘ரவுண்ட்– ராபின்’ முறையில் போட்டிகள் நடந்தன. மொத்தம், 16 அணிகள் தேர்வாகின. இங்கிலாந்து, துருக்கி அணிகள் தொடரில் பங்கேற்க மறுத்தன.

ஆசிய தரப்பில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றது. ஆனால், போக்குவரத்து செலவு, பயிற்சிக்கு போதிய நேரமின்மை, உலக கோப்பையைவிட ஒலிம்பிக் தான் முக்கியம் உள்ளிட்ட காரணங்களை காட்டி போட்டியில் பங்கேற்க மறுத்தது. அப்போது இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் தான் விளையாடினர். ‘பிபா’ விதிமுறையின்படி ‘ஷூ’ அணிந்து விளையாட வேண்டும். இதன் காரணமாகவும் உலக கோப்பையை இந்தியா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

அதிரடி திருப்பம்

மொத்தம் நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பெறும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகின. இதன்படி, பிரேசில், உருகுவே, சுவீடன், ஸ்பெயின் அணிகள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன.

உருகுவே சாம்பியன்

இறுதிச் சுற்றில் சுவீடன் (7–1), ஸ்பெயின் (6–1) அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றி பெற்ற பிரேசில் அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மறுபக்கம் உருகுவே அணி, சுவீடனுக்கு எதிராக (3–2) வெற்றியையும், ஸ்பெயினுக்கு எதிராக (2–2) ‘டிரா’வும் செய்தது.

இறுதிச் சுற்றின் கடைசி போட்டியில் பிரேசில், உருகுவே அணிகள் மோதின. இப்போட்டியை ‘டிரா’ செய்தாலே கோப்பை வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கியது பிரேசில். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உருகுவே அணி, 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக (1930, 1950) உலக கோப்பையை கைப்பற்றியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?