Advertisement


குல்தீப் ‘சுழல்’ ஜாலம் *கோல்கட்டா அணி வெற்றி

மே 15, 2018.
 Comments  
 


kuldeep Yadav, cricket, ipl, kolkata
 

கோல்கட்டா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான, ஐ.பி.எல்., லீக் போட்டியில், கோல்கட்டா அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘சுழலில்’ ஜாலம் காட்டிய குல்தீப் யாதவ், 4 விக்கெட் சாய்த்தார்.

இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்த அணியில், பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு ஷிவம் மாவி சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் ஷார்ட், ஸ்ரேயாஸ் கோபால், குல்கர்னிக்குப் பதில், இஷ் சோதி, அனுரீத் சிங், ராகுல் திரிபாதி இடம் பெற்றனர்.

வேகமான துவக்கம்

ராஜஸ்தான் அணிக்கு பட்லர், திரிபாதி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பிரசித் வீசிய இரண்டாவது ஓவரில், ஒரு சிக்சர், 3 பவுண்டரி என, தொடர்ந்து விளாசினார் திரிபாதி. அடுத்து வந்த ஷிவம் மாவியின் 2வது ஓவரில், 2 சிக்சர், 4 பவுண்டரி என, 28 ரன்கள் குவித்தார் பட்லர்.

அதாவது, தொடர்ந்து 10 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர் என, 46 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ரசல் ‘வேகத்தில்’ திரிபாதி (27) அவுட்டானார். கேப்டன் ரகானே (11), குல்தீப் ‘சுழலில்’ போல்டானார்.

குல்தீப் அபாரம்

இதன் பின், ராஜஸ்தான் அணியின் ‘மிடில் ஆர்டர்’ ஆட்டங்கண்டது. பட்லர் (39 ரன், 22 பந்து), குல்தீப்பிடம் சிக்கினார். சஞ்சு சாம்சன் (12) கைவிட, ஸ்டூவர்ட் பின்னி (1), குல்தீப்பிடம் ‘சரண்’ அடைந்தார். கவுதம் (3), ஷிவம் மாவி ‘வேகத்தில்’ சரிந்தார். 

பென் ஸ்டோக்சை, 11 ரன்னுடன் திருப்பி அனுப்பினார் குல்தீப். ஒருகட்டத்தில், 76/2 ரன் என, வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி, அடுத்து 31 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து, 107/7 ரன் என, தள்ளாடியது. இஷ் சோதி (1), ஜோப்ரா ஆர்ச்சர் (6) நீடிக்கவில்லை.

கடைசியில் உனத்கட் (26), போல்டாக, ராஜஸ்தான் அணி, 19 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கோல்கட்டா சார்பில் குல்தீப் யாதவ் 4, ரசல், பிரசித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

லின் பதிலடி

கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன், கிறிஸ் லின் ஜோடி துவக்கம் கொடுத்தது. கவுதம் வீசிய முதல் ஓவரில், 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் எடுத்தார் நரைன். இவரை, 7வது பந்தில் வெ ளியேற்றினார் ஸ்டோக்ஸ். உத்தப்பா (4), ராணா (21) கைவிட்டனர். லின், 45 ரன்கள் எடுத்தார். 

கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்த, கோல்கட்டா அணி வெற்றியை எளிதாக நெருங்கியது. கடைசியில் இவர் ஒரு சிக்சர் அடிக்க, கோல்கட்டா அணி 18 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் (31), ரசல் (20) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

2

ஐ.பி.எல்., 11வது சீசனில் இரண்டாவது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார் குல்தீப் யாதவ். இவர், நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக 20 ரன்னுக்கு 4 விக்கெட் சாய்த்தார். முதலிடத்தில் பஞ்சாப்பின் ராஜ்பூட் (14 ரன், 4 விக்., ஐதராபாத்) உள்ளார்.

28

ஐ.பி.எல்., 2018 தொடரில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுத்தந்த பவுலர்களில், நேற்று இரண்டாவது இடம் (28 ரன்) பெற்றார் கோல்கட்டாவின் ஷிவம் மாவி. இதற்கு முன், இவர், டில்லிக்கு எதிராக இவர், 29 ரன்கள் விட்டுத்தந்தார். அடுத்த இடத்தில், பெங்களூருவின் உமேஷ் யாதவ் (27) உள்ளார்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?