Advertisement


‘பிபா’ கவுன்ட்டவுண் 29: இத்தாலி அணிக்கு ‘இரண்டு’

மே 15, 2018.
 Comments  
 


world cup, soccer
 

மூன்றாவது உலக கோப்பை கால்பந்து தொடர், 1938ல் பிரான்சில் நடந்தது. இத்தொடர், ஐரோப்பிய கண்டத்தில் மீண்டும் நடப்பதை விரும்பாத அர்ஜென்டினா, உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகள், தொடரை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக, ஸ்பெயின் அணியும் பங்கேற்கவில்லை.

ஜூன் 4ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்த இத்தொடரில் 15 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்பட்டன.

பிரேசில் அபாரம்

சொந்தமண்ணில் களமிறங்கிய போதும், பிரான்ஸ் அணி பெரிய அளவில் சாதிக்கவில்லை. காலிறுதியில் இத்தாலி அணியிடம் தோற்று வெளியேறியது. பிரேசில் அணி, துவக்கத்தில் இருந்தே கலக்கியது. ‘கருப்பு தங்கம்’ என அழைக்கப்பட்ட லியானி டாசின் ஆட்டம், இந்த அணிக்கு பக்கபலமாக அமைந்தது. ஆனால், இத்தாலிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இவருக்கு ஓய்வு கொடுத்து தவறு செய்தார் பிரேசில் அணி பயிற்சியாளர் பிமன்டா. இதனால் பிரேசில் தோல்வி அடைய, இத்தாலி பைனலுக்கு முன்னேறியது.

இத்தாலி சாம்பியன்

மற்றொரு அரையிறுதியில் சுவீடனை வீழ்த்திய ஹங்கேரி அணி, பைனலுக்கு முன்னேறியது. பரபரப்பான பைனலில் இத்தாலி 4–2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி கோப்பை வென்றது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இத்தொடரில் மூன்றாவது இடத்தை பிரேசில் கைப்பற்றியது. 7 கோல்கள் அடித்து அசத்திய பிரேசிலின் லியானி டாஸ், ‘கோல்டன் ஷூ’ வென்றார்.

‘பிரீ–கிக்’

இத்தொடருக்கு பின், இரண்டாவது உலகப் போர் துவங்கியது. இதனால் 12 ஆண்டுகள் உலக கோப்பை தொடர் நடக்கவில்லை. இதனால் 1934 மற்றும் 1938ம் ஆண்டு கோப்பை வென்ற இத்தாலி அணி, தொடர்ந்து 16 ஆண்டுகளாக(1934--–1950) உலக சாம்பியன் பட்டத்துடன் வலம் வந்தது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?