Advertisement


மனோகர் மீண்டும் ஐ.சி.சி., சேர்மன்

மே 15, 2018.
 Comments  
 


Shashank Manohar
 

துபாய்: ஐ.சி.சி., சேர்மனாக இரண்டாவது முறையாக போட்டியின்றி இந்தியாவின் சஷாங்க் மனோகர் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர், 61. கடந்த 2016ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மன் பதவியிலிருந்து தமிழகத்தின் சீனிவாசன் விலகியதால், மனோகர் இப்பதவியை ஏற்றார். இந்த காலகட்டத்தில், புதிய வருமான பகிர்வு திட்டத்தை கொண்டு வந்தார். இதனால், ஐ.சி.சி.,யின் ஒட்டுமொத்த வருவாய் பங்கீட்டில் இந்தியாவின் பங்கு குறைக்கப்பட்டது. இதற்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தபோதும், மற்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 

இந்நிலையில், ஐ.சி.சி., சேர்மன் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்படி, ஐ.சி.சி., முன்னாள் அல்லது தற்போதைய இயக்குனர்கள் தலா ஒருவரை தங்கள் சார்பில் முன்னிறுத்தலாம். ஆனால், கடந்த மாதம் கோல்கட்டாவில் நடந்த ஐ.சி.சி., கூட்டத்தில் மனோகரை ஒரு மனதாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மனோகரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லாத காரணத்தால், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். 

இது குறித்து சஷாங்க் மனோகர் கூறுகையில்,‘‘ ஐ.சி.சி., சேர்மனாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். கிரிக்கெட்டை உலக அரங்கில் எடுத்து செல்லும் முயற்சியில் ஈடுபடுவோம்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?