Advertisement


ராஜஸ்தான்–கோல்கட்டா அணிகள் மோதல்

மே 14, 2018.
 Comments  
 


Rajasthan, Kolkata, IPL T20 Cricket, Rahane, Dinesh Karthik
 

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகின்றன.

இந்தியாவின் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில், ஐதராபாத், சென்னை அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள இடத்தை பெற கடும் போட்டி காணப்படுகிறது. இந்நிலையில், 12 போட்டியில் தலா 6 வெற்றியுடன், தலா 12 புள்ளிகள் பெற்ற கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் இன்று களமிறங்குகின்றன.

நரைன் நம்பிக்கை: கோல்கட்டா மண்ணில் ‘எலிமினேட்டர்’ (மே 23), தகுதிச்சுற்று 2 (மே 25) நடக்கவுள்ள நிலையில், இன்று சொந்தமண்ணில் கடைசியாக களமிறங்குகிறது. மீண்டும் இங்கு விளையாட வேண்டும் எனில், இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டும்.

கடந்த போட்டியில் 245/6 ரன் எடுத்த மகிழ்ச்சியில் உள்ள இந்த அணிக்கு, மீண்டும் சுனில் நரைன், கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ் லின், இளம் வீரர் சுப்மன் கில் உள்ளிட்டோர் கைகொடுக்கலாம். பவுலிங்கில் சுனில் நரைன் (14 விக்.,), பியுஸ் சாவ்லா (11), குல்தீப் (9) கூட்டணி பந்தை ‘சுழற்ற’ தயாராக உள்ளது.

பட்லர் பலம்: ராஜஸ்தான் அணி, கடைசியாக களமிறங்கிய 3 போட்டிகளிலும் ‘சேஸ்’ செய்து வென்றது. துவக்க வீரராக களமிறங்கிய பிறகு, 67, 51, 82, 95, 94 என, 5 இன்னிங்சிலும் அரைசதம் அடித்து, எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறார் பட்லர் (509 ரன்). இவருக்கு சஞ்சு சாம்சன் (379), கேப்டன் ரகானே (280), பின் வரிசையில் ஸ்டோக்ஸ் (185) என, பலரும் உதவுகின்றனர்.

யாருக்கு சாதகம்: பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் (13 விக்.,) தவிர, மற்றவர்கள் யாரும் ஜொலிக்காதது ஏமாற்றம் தான். உனத்கட் (9), கவுதம் (8) தொடர்ந்து ஏமாற்றம் தருகின்றனர். இரு அணிகள் மோதிய 17 போட்டிகளில், 9ல் ராஜஸ்தான் வென்றது. அதேநேரம், சொந்தமண்ணில் ராஜஸ்தானுக்கு எதிரான 6 போட்டியில், 4ல் கோல்கட்டா வெற்றி பெற்றது, இந்த அணிக்கு சாதகம் தான்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?