Advertisement


மின்னிய முசோலினி அணி: ‘பிபா’ கால்பந்து கவுன்ட் டவுண் 30

மே 14, 2018.
 Comments  
 


FIFA 1934 World Cup Soccer, Italy, Football
 

இரண்டாவது உலக கோப்பை கால்பந்து தொடர், 1934ல் இத்தாலியில் நடந்தது. முதன்முறையாக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. ‘நாக்–அவுட்’ முறையில் நடந்த தகுதிச் சுற்று ஆட்டங்களின் முடிவில், 16 அணிகள் பிரதான சுற்றில் களமிறங்கின. மொத்தம் 17 போட்டிகள் நடந்தன. 1930ல் உருகுவேயில் நடந்த முதல் உலக கோப்பை தொடரை ஐரோப்பிய அணிகள் புறக்கணித்தன. இதற்கு பதிலடியாக இத்தொடரை உருகுவே புறக்கணித்தது. இத்தாலியின் அப்போதைய பிரதமர் முசோலினி தனது ‘பாசிச’ கொள்கையை பரப்பும் களமாக, உலக கோப்பை தொடரை பயன்படுத்த முயன்றார். இத்தாலி அணி மோதவிருந்த போட்டிகளுக்கு முதல் நாள், நடுவர்களை சந்தித்து, தீர்ப்புகளை இத்தாலி அணிக்கு சாதகமாக வழங்க வேண்டும் என கட்டளையிட்டார்.

இரண்டு நாள் ஆட்டம்: இத்தொடரில் இத்தாலி–ஸ்பெயின் அணிகள் மோதிய காலிறுதி ஆட்டம், இரண்டு நாள் நடந்தது. முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன.  இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில், இத்தாலியின் கிசப்பா மயா ஒரு கோலடித்து, அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

அரையிறுதியில் இத்தாலி, ஆஸ்திரியாவையும், செக்கோஸ்லோவேக்கியா, ஜெர்மனியையும் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறின. தலைநகர் ரோமில் நடந்த இறுதிப் போட்டியில், தனக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ‘பாக்சில்’ முசோலினி அமர்ந்து போட்டியை ரசித்தார். கடைசி 20 நிமிடங்கள் வரை, இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. யாரும் எதிர்பார்க்காத நிலையில், செக்கோஸ்லோவேக்கியாவின் பக், ஒரு கோல் அடிக்க, 1–0 என முன்னிலை பெற்றது. இதனால் முசோலினி சோகத்தின் உச்சத்திற்கே சென்றார். அடுத்த 5 நிமிடங்களில் இத்தாலியின் ஓர்சி கோலடிக்க, ஆட்டம் சமநிலையை எட்டியது. பின்னர் ஒருவழியாக சகஜ நிலைக்கு திரும்பினார் முசோலினி. அதற்குப் பின் கூடுதல் நேரத்தில் சியாவியோ ஒரு கோல் அடிக்க, இத்தாலி அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பையை கைப்பற்றியது.

‘பிரீ–கிக்’

இத்தாலியில் நடந்த 2வது உலக கோப்பை தொடரில் மொத்தம் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. அதிக பட்சமாக செக்கோஸ்லோவேக்கியாவின் ஓல்ட்ரிச் நெஜட்லி, 5 கோல்கள் அடித்தார். இவருக்கு ‘கோல்டன் ஷூ’ வழங்கப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?