Advertisement


அசராத அம்பதி ராயுடு: கேப்டன் தோனி பாராட்டு

மே 14, 2018.
 Comments  
 


Ambati Rayudu, Chennai Super Kings, Dhoni, IPL T20 Cricket
 

புனே: ‘‘வேகம், சுழல் என எவ்வித பந்துவீச்சையும் கண்டு அசராமல் ரன் சேர்க்கும் தகுதி அம்பதி ராயுடுவுக்கு உள்ளது,’’ என, சென்னை அணி கேப்டன் தோனி, புகழாரம் சூட்டியுள்ளார்.

புனேயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. அபாரமாக ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர் அம்பதி ராயுடு, 62 பந்தில் 100 ரன்கள் (7 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்த இவர், ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

இதுகுறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறியது: இந்த சீசனில் அம்பதி ராயுடு சிறப்பாக செயல்படுவார் என, தொடர் துவங்குவதற்கு முன்பே கணித்திருந்தேன். ஏனெனில் இவர், வேகம், சுழல் என இருவித பந்துவீச்சையும் சம அளவில் எதிர்கொண்டு ரன் குவிக்கிறார். இதுபோல மற்ற அணிகளின் துவக்க வீரர்கள் செயல்படுவதில்லை.

இரண்டாவது பாதியில் பந்து ‘சுவிங்’ ஆகும் என நினைத்திருந்தேன். ஆனால் பந்து ‘சுவிங்’ ஆகாதது வியப்பாக உள்ளது. இதனால் வாட்சன், அம்பதி ராயுடு ரன் மழை பொழிந்து நல்ல துவக்கம் தந்தனர். இது, 180 ரன்களை சுலபமாக ‘சேஸ்’ செய்ய கைகொடுத்தது.

இவ்வாறு தோனி கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?