Advertisement


தங்கம் வென்றார் ஹீனா

மே 14, 2018.
 Comments  
 


Heena Sidhu, International Shooting, Germany
 

ஹனோவர்: ஜெர்மனியில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல், 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை நிவேதா, வெண்கலம் கைப்பற்றினார்.

ஜெர்மனியில் உள்ள ஹனோவர் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீ நிவேதா, 582 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சித்து, 572 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார்.

அடுத்து நடந்த பைனலில், ஹீனா சித்து, பிரான்சின் மதில்டே லமோல், தலா 239.8 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். பின், ‘டை–பிரேக்கரில்’ அசத்திய ஹீனா சித்து, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். பிரான்ஸ் வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரீ நிவேதா, 219.2 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.

வரும் மே 22–29ல் ஜெர்மனியின் முனிக் நகரில், உலக கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளன. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் ஹீனா சித்து, ஒரு தங்கம் (25 மீ., ‘பிஸ்டல்’), ஒரு வெள்ளி (10 மீ., ‘ஏர் பிஸ்டல்’) வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?