Advertisement


பெடரர் மீண்டும் ‘நம்பர்–1’

மே 14, 2018.
 Comments  
 


ATP, WTA Tennis Ranking, Federer, Nadal, Petra Kvitova
 

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், மீண்டும் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். ஸ்பெயினின் ரபெல் நடால், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் ரபெல் நடால், ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், சமீபத்தில் முடிந்த மாட்ரிட் மாஸ்டர்ஸ் ஓபனில் காலிறுதியோடு வெளியேறியது பின்னடைவுக்கு காரணம். இதனையடுத்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

மாட்ரிட் மாஸ்டர் தொடரில் கோப்பை வென்ற ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ‘நம்பர்–3’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். செர்பியாவின் ஜோகோவிச், 12வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 94வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 23வது இடத்தில் நீடிக்கிறார். மற்ற இந்திய வீரர்களான திவிஜ் சரண் (44வது இடம்), பயஸ் (51வது) பின்னடைவை சந்தித்தனர்.

கிவிட்டோவா முன்னேற்றம்

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 10வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த மாட்ரிட் ஓபனில் கோப்பை வென்றார். முதல் மூன்று இடங்களில் முறையே ருமேனியாவின் சிமோனா ஹாலெப், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா, நீடிக்கின்றனர்.

இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 7 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 187வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தண்டி, 16 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 254வது இடத்தை கைப்பற்றினார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?