Advertisement


பிபா கால்பந்து கவுன்ட் டவுண் 31: உருகுவேக்கு முதல் மகுடம்

மே 13, 2018.
 Comments  
 


soccer, fifa
 

முதலாவது உலக கோப்பை தொடர் 1930ல் உருகுவேயில் நடந்தது. இதில், 13 அணிகள் மட்டும் பங்கேற்றன. ஜூலை 13 முதல் 30ம் தேதி வரை தொடர் நடந்தது. பைனல், ஜூலை 30ல் மான்ட்விடியோ நகரில் உள்ள எஸ்டாடியோ சென்டினரியோ மைதானத்தில் நடந்தது. இதில் ‘ஒலிம்பிக் சாம்பியனான’ உருகுவே அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. சுதந்திரமடைந்து நுாற்றாண்டு விழாவை கொண்டாடிய உருகுவே ரசிகர்கள் தங்கள் அணியின் செயல்பாட்டை காண, காலையில் இருந்தே மைதானத்தில் குவிந்தனர். சுமார் 93 ஆயிரம் ரசிகர்களுக்கு முன் போட்டி நடந்தது.

படகு கேட்ட நடுவர்

பைனல் துவங்குவதற்கு முன், எந்த அணியின் பந்தை பயன்படுத்துவது என்ற சர்ச்சை கிளம்பியது. ‘பிபா’ நிர்வாகிகள் தலையிட்டு, முதல் பாதிக்கு அர்ஜென்டினா அணி பந்தை வழங்குவது என்றும், இரண்டாவது பாதியில் உருகுவே அணியின் பந்தை பயன்படுத்துவது என்றும் முடிவு செய்தனர். நடுவராக இருந்த பெல்ஜியத்தின் ஜீன் லென்ஜனஸ் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என பயந்தார். தான் உடனடியாக தப்பிச் செல்வதற்கு வசதியாக, இறுதி ‘விசில்’ அடிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் துறைமுகத்தில் படகு ஒன்று தயாராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தாராம்.

பைனலில் அபாரமாக ஆடிய உருகுவே அணி, அர்ஜென்டினாவை 4–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதலாவது உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை கொண்டாட, அடுத்த நாள் உருகுவேயில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.

‘எக்ஸ்டிரா டைம்’

உலக கோப்பை வரலாற்றின் முதல் கோல் அடித்தவர் பிரான்ஸ் அணியின் லுாசியன் லாரன்ட். இவர், 1930, ஜூலை 13ம் தேதி மெக்சிகோவுக்கு எதிராக நடந்த லீக் போட்டியின் 19வது நிமிடத்தில் கோல் அடித்தார். இப்போட்டியில் பிரான்ஸ் அணி (4–1) வென்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?