Advertisement


கோஹ்லி– அஷ்வின் அணிகள் மோதல்

மே 13, 2018.
 Comments  
 


Bangalore team
 

இந்துார்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று கோஹ்லியின் தலைமையிலான பெங்களூரு, அஷ்வினின் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இன்று ம.பி.,யின் இந்துாரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி, 11 போட்டியில், 4 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தால் கூட ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்துவிடும் அபாயத்தில் உள்ளது. பார்த்திவ் படேல் சிறப்பான துவக்கம் தருகிறார். இவருக்கு பிரண்டன் மெக்கலம், வோரா என யாரை மாற்றினாலும் ‘பார்ட்னர்ஷிப்’ கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த அணியையும் கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ் தான் காப்பாற்றுகின்றனர். கடந்த போட்டியில் டில்லி பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், ‘சூப்பர் மேன்’ போல உருவெடுத்தனர். இந்த இருவரின் அரைசதம் வெற்றிக்கும் உதவியது. மன்தீப், மொயீன் அலி போன்றோர் சொதப்புவது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த போட்டியில் உமேஷ், சவுத்தீ விக்கெட் வீழ்த்தாமல் ஏமாற்றினர். ‘சுழலில்’ அனுபவம் இல்லாத வாஷிங்டன் சுந்தர் சொதப்புவதால், சகாலை மட்டுமே அதிக அளவில் நம்ப வேண்டிய நிலை உள்ளது.

ராகுல் பலம்

பஞ்சாப் அணி, 11 போட்டியில், 6 வெற்றி உட்பட 12 புள்ளிகளுடன் உள்ளது. ராஜஸ்தான், கோல்கட்டா அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்த பஞ்சாப் அணி, இன்று எழுச்சி கண்டால் நல்லது. வீரர்களின் ‘பேட்டிங்’ வரிசையை மாற்றிய விவகாரத்தில் ஆலோசகர் சேவக்– உரிமையாளர் பிரித்திக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், லோகேஷ் ராகுலின் ஆட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இத்தொடரில், ஐந்து அரைசதம் விளாசிய இவருடன், கெய்ல் ‘புயல்’ இணைந்தால் கட்டுப்படுத்துவது கடினம். கருண் நாயர், பின்ச் உள்ளிட்டோர் ‘மிடில்–ஆர்டரை’ வலுப்படுத்துவது அவசியம். கடந்த முறை 45 ரன் விளாசிய, கேப்டன் அஷ்வினின் ரன் குவிப்பு வியக்க வைக்கிறது.

சுழற்பந்துவீச்சில் முஜிப் அசத்தினாலும், அக்சர் படேல் கடந்த போட்டியில் 52 ரன் வழங்கி சோதித்தார். அஷ்வின் 11 போட்டியில் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். ‘வேகத்தில்’ ஆண்ட்ரூ டை அசத்துகிறார். 

 

 

 

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?