Advertisement


பெண்கள் ஹாக்கி: இந்தியா வெற்றி

மே 13, 2018.
 Comments  
 


Womens Asian Champions Trophy Hockey, India, Japan
 

டோங்கே சிட்டி: பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை சுனில் லக்ரா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. முதல் லீக் போட்டியில், நவ்னீத்  கவுர் ‘ஹாட்ரிக்’ கோலடித்து கைகொடுக்க, 4–1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வென்றது.

தென் கொரியாவில், பெண்களுக்கான 5வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, சீனா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் என, 5 அணிகள் விளையாடுகின்றன. முதல் லீக் போட்டியில், உலகின் ‘நம்பர்–10’ இந்திய அணி, 12வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியை எதிர்கொண்டது.

இந்தியா ஆதிக்கம்: ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் வந்தனா ‘பாஸ்’ செய்த பந்தை கோலாக மாற்றிய நவ்னீத் கவுர், இந்திய அணிக்கு 1–0 என, முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து அசத்திய இவர், 25வது நிமிடத்தில் வந்தனா உதவியடன் மீண்டும் ஒரு ‘பீல்டு’ கோலடித்தார்.

பின், இந்தியாவுக்கு கிடைத்த 2 ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளை தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர் வீணடித்தனர். இதேபோல ஜப்பான் அணிக்கு தொடர்ச்சியாக கிடைத்த 3 ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பர் சவிதா அருமையாக தடுத்தார்.

நவ்னீத் ‘ஹாட்ரிக்’: இந்நிலையில், 53வது நிமிடத்தில் உதிதா ‘பாஸ்’ செய்த பந்தை அனுபா பார்லா, ஒரு கோல் அடித்தார். பின், 55வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் இந்தியாவின் நவ்னீத் கவுர், ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய ஜப்பான் அணிக்கு 58வது நிமிடத்தில் அகி யமாடா, ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் சீனாவை வரும் 16ல் எதிர்கொள்கிறது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?