Advertisement


கிவிட்டோவா சாம்பியன்

மே 13, 2018.
 Comments  
 


Madrid Open Tennis, Petra Kvitova, Czech, Kiki Bertens
 

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் நெதர்லாந்தின் பெர்டன்சை தோற்கடித்தார்.

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–10’ வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 20வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் மோதினர். ‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய கிவிட்டோவா, 2வது செட்டை 4–6 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6–3 என வென்றார்.

மூன்றாவது முறை: இரண்டு மணி நேரம், 52 நிமிடம் வரை நீடித்த போட்டியில் அசத்திய கிவிட்டோவா, 7–6, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (2011, 2015, 2018) கோப்பை வென்றார். இதன்மூலம் இத்தொடரில் 3 முறை கோப்பை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலெப், தலா 2 முறை கோப்பை வென்றிருந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?