Advertisement


கோஹ்லி, டிவிலியர்ஸ் அசத்தல் * பெங்களூரு அணி நான்காவது வெற்றி

மே 12, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Bangalore, Delhi, Rishabh Pant
 

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணி, நான்காவது வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், டில்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில், கோஹ்லியின் பெங்களூரு அணி, ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்த டில்லியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.

ரிஷாப் அபாரம்

டில்லி அணிக்கு ஜேசன் ராய், பிரித்வி ஷா ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சகால் ‘சுழலில்’, பிரித்வி (2),  ஜேசன் ராய் (12) போல்டாகினர். பின் வந்த ரிஷாப் பன்ட், இத்தொடரில் 5வது அரைசதம் எட்டினார். இவர், 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 32 ரன்னுக்கு வீழ்ந்தார். 20 ஓவரில், டில்லி அணி 4 விக்கெட்டுக்கு, 181 ரன்கள் எடுத்தது. அபிஷேக் (46 ரன், 19 பந்து), ஷங்கர் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘இருவர்’ அபாரம்

கடின இலக்கைத் துரத்திய பெங்களூரு அணியை பார்த்திவ் (6), மொயீன் அலி (1) கைவிட்டனர். பின் இணைந்த கோஹ்லி, டிவிலியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஐ.பி.எல்., அரங்கில் கோஹ்லி 34வது அரைசதம் அடித்தார். இத்தொடரில் இது 4வது அரைசதம். 

மறுபக்கம், டிவிலியர்ஸ் இத்தொடரில் 26வது அரைசதம் அடித்தார். ஐ.பி.எல்., தொடரில் 8வது முறையாக, இந்த ஜோடி 100 ரன்னுக்கும் மேல் (118) சேர்த்த நிலையில், கோஹ்லி (70) அவுட்டானார். மன்தீப் (13), சர்பராஸ் (11) ஏமாற்றினர். கடைசியில், டிவிலியர்ஸ் ஒரு சிக்சர் அடிக்க, பெங்களூரு அணி 19 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 187 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் (72), கிராண்ட்ஹோம் (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?