Advertisement


சாதிக்குமா சென்னை கிங்ஸ்

மே 12, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Chennai, Hyderabad
 

புனே: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை அணி, ஐதராபாத்தை சந்திக்கிறது. தோனி தலைமையில் இரு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கிய சென்னை அணிக்கு, ‘சீனியர்’ வீரர்கள் சிறப்பாக கைகொடுக்க, இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில், 7ல் வெற்றி பெற்று, 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

பேட்டிங்கில், அம்பதி ராயுடு (435 ரன்), வாட்சன் (367), ரெய்னா (313) என, பலரும் தொடர்ந்து கைகொடுத்து வருகின்றனர். அடுத்து வரும் கேப்டன் தோனியும் (393) ரன்கள் சேர்க்கிறார். அதேநேரம், கடந்த சில போட்டிகளில் சென்னை அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்த போதும், கடைசியில் பெரியளவில் ஸ்கோர் எடுக்காமல் போவது ஏமாற்றமே.

தேறாத பவுலிங்: மீதமுள்ள 3 போட்டிகளில், ஒன்றில் வென்றால் கூட ‘பிளே ஆப்’ வாய்ப்பை’ உறுதி செய்யலாம் என்ற நிலையில், உள்ள சென்னை அணிக்கு, பவுலிங், பீல்டிங் தான் பெரும் தொல்லையாக உள்ளது. கடந்த முறை சிக்சர்களாக வாரி வழங்கிய, டேவிட் வில்லே, ‘வில்லன்’ ஆனார்.

இன்று இவருக்குப் பதில் லுங்கிடியை சேர்த்தால் நல்லது. இவருடன் ஷர்துல் தாகூர் இணையலாம். சுழலில், ஜடேஜா, ஹர்பஜன் சிங்குடன், இம்ரான் தாகிர் என, மூன்று ‘சீனியர்களும்’ உதவ வேண்டும். பீல்டிங்கிலும் சுதாரித்துக் கொண்டால் தான், வெற்றி எளிதாக வசப்படும். 

அசுர பலம்: ஐதராபாத் அணி வில்லியம்சன் (493 ரன்) தலைமையில், 11 போட்டியில் 9 ல் வென்று மிரட்டுகிறது. ஷிகர் தவான் (290), யூசுப் பதான் (186)(, மணிஷ் பாண்டே (184) பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர். பவுலிங்கை பொறுத்தவரையில், இத்தொடரில் சிறந்த பவுலர்களை கொண்ட அணி இது தான். 

ரஷித் கான் (13), சித்தார்த் கவுல் (13) இணைந்து, ‘சுழல்’ மற்றும் ‘வேகத்தில்’ மிரட்ட, சாகிப் அல் ஹசன் (12) தன்பங்கிற்கு ஒருபுறம் எதிரணிகளுக்கு குடைச்சல் தருகிறார். தவிர, கடைசி கட்ட ஓவர்களில் மிரட்ட, புவனேஷ்வர் குமாரும் (8) இருப்பது பெரும் பலம். 

6 முறை

இரு அணிகள் மோதிய 8 ஐ.பி.எல்., போட்டிகளில், 6ல் சென்னை அணி வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஐதராபாத் அணி, 2ல் தான் வென்றது. 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?