Advertisement


கோல்கட்டா அணி கலக்கல் வெற்றி

மே 12, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Punjab, Kolkata
 

இந்துார்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோல்கட்டா அணி, 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரைசதம் கடந்து கைகொடுத்த பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் போராட்டம் வீணானது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, இந்துாரில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

நரைன் அபாரம்: கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின் (27) நல்ல துவக்கம் தந்தார். அஷ்வின் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நரைன், 26 பந்தில் அரைசதமடித்தார். அபாரமாக ஆடிய இவர், ஸ்ரண் வீசிய 11வது ஓவரில், 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த உத்தப்பா, அஷ்வின் வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். டை வீசிய 12வது ஓவரில் நரைன் (75), உத்தப்பா (24) அவுட்டாகினர்.

கார்த்திக் விளாசல்: அக்சர் படேல் வீசிய 13வது ஓவரில், 2 பவுண்டரி அடித்த கேப்டன் தினேஷ் கார்த்திக், முஜீப் வீசிய 16வது ஓவரில், 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மறுமுனையில் அசத்திய ஆன்ட்ரி ரசல், அக்சர் படேல் வீசிய 15வது ஓவரில், 2 சிக்சர் பறக்கவிட்டார். நான்காவது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்த போது டை பந்தில் ரசல் (31) சரணடைந்தார். நிதிஷ் ராணா (11) நிலைக்கவில்லை. கலக்கலாக ஆடிய கார்த்திக், 22 பந்தில் அரைசதமடித்தார். ஸ்ரண் பந்தில் கார்த்திக் (50) அவுட்டானார்.

கோல்கட்டா அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 245 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் (16), சியர்லஸ் (6) அவுட்டாகாமல்  இருந்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஆன்ட்ரூ டை, 4 விக்கெட் கைப்பற்றினார்.

ராகுல் நம்பிக்கை: கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல் சூப்பர் துவக்கம் தந்தார். இவர், சுனில் நரைன் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசினார். கெய்ல் (21) சோபிக்கவில்லை. அடுத்து வந்த மயங்க் அகர்வால் (0), கருண் நாயர் (3), ரசலிடம் சரணடைந்தனர். ரசல், சியர்லஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ராகுல், 22 பந்தில் அரைசதமடித்தார். பொறுப்பாக ஆடிய ராகுல் (66), நம்பிக்கை தந்தார்.

அக்சர் படேல் (19) நிலைக்கவில்லை. ஆரோன் பின்ச் (34), ஆறுதல் தந்தார். நரைன் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த கேப்டன் அஷ்வின், ரசலின் 19வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். பிரசித் வீசிய கடைசி ஓவரில் டை (14), அஷ்வின் (45) அவுட்டாகினர்.

பஞ்சாப் அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 214 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்ரண் (1), மோகித் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் ரசல், 3 விக்கெட் கைப்பற்றினார்.

245 ரன்கள்

பஞ்சாப் அணிக்கு எதிராக 245 ரன்கள் குவித்த கோல்கட்டா அணி, இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், கோல்கட்டாவுக்கு எதிராக டில்லி அணி, 219 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* இது, ஒட்டுமொத்த ஐ.பி.எல்., அரங்கில் பதிவான 4வது சிறந்த ஸ்கோர். முதல் மூன்று இடங்களில் பெங்களூரு (263/5, எதிர்:புனே வாரியர்ஸ், 2013), பெங்களூரு (248/3, எதிர்: குஜராத், 2016), சென்னை (246/5, எதிர்: ராஜஸ்தான், 2010) அணிகள் உள்ளன.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?