Advertisement


பிரித்தி – சேவக் மோதல்

மே 11, 2018.
 Comments  
 


Punjab co owner Preity Zinta gets into verbal spat with Virender Sehwag
 

இந்துார்: பஞ்சாப் அணி உரிமையாளர் பிரித்தி ஜிந்தா, ஆலோகர் சேவக் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இந்த சீசனுடன் பஞ்சாப் அணியை விட்டு சேவக் விலகுவார் எனத் தெரிகிறது.

இந்திய அணி முன்னாள் துவக்க வீரர் சேவக், 39. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி துவக்க வீரராக இருந்து, பின் ஆலோசகராக மாறினார். இந்த ஆண்டு, அஷ்வினை கேப்டனாக தேர்வு செய்தது, ஏலத்தில் கெய்லை வாங்கிய போன்ற முக்கிய முடிவுகளை இவர் தான் எடுத்தார். இதனிடையே, 11வது சீசன் ஐ.பி.எல்., தொடரை சிறப்பாக துவக்கிய பஞ்சாப் அணி (12 புள்ளி), இதுவரை 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி அடைந்தது. கடந்த போட்டியில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ராஜஸ்தானை சந்தித்தது பஞ்சாப். இப்போட்டியில், கருண் நாயர், மனோஜ் திவாரி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு முன்னதாக, ‘சுழல்’ வீரர், கேப்டன் அஷ்வின், 3வது வீரராக களமிறங்கி, ‘டக்’ அவுட்டானார்.

பிரித்தி கோபம்

கடைசியில் பஞ்சாப் அணி தோற்றது. தவிர, கடைசியாக களமிறங்கிய 5 போட்டிகளில் 3ல் தோற்றது, அணி உரிமையாளர், பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தாவை கோபத்தில் தள்ளி விட்டது. பஞ்சாப் அணி வீரர்கள் அறைக்கு சென்ற இவர்,  ஆலோசகர் சேவக்கிடம், ‘அஷ்வினை ஏன் முன்னதாக களமிறக்கினீர்கள்’ என, கேட்டதாக கூறப்படுகிறது. சூழ்நிலையை புரிந்து கொண்ட சேவக், அமைதி காத்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து கோபமாக பேசிய அவர்,‘ தொடர்ந்து தேவையில்லாமல், மாற்றங்கள் செய்வதால் தான் தோற்க நேரிடுகிறது,’ என, சேவக் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தியின் இந்த செயல் குறித்து, மற்றொரு உரிமையாளரிடம் பேசிய சேவக்,‘ கிரிக்கெட் நடவடிக்கையில் அவர், தலையிட வேண்டாம், விலகி இருக்கச் சொல்லுங்கள்,’ என, கூறியதாக தெரிகிறது. இவ்விஷயத்தை பெரிது படுத்தினால், வீரர்கள் கவனம் சிதறிவிடும் என்பதால், சேவக், தொடர்ந்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளாராம்.

விரைவில் விலகல்

இந்த சீசனுடன், பஞ்சாப் அணியுடனான, தனது 5 ஆண்டுகால ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவும் சேவக் முடிவு செய்துள்ளார் என, கூறப்படுகிறது. மற்றொரு உரிமையாளர் மோகித் பர்மன் கூறுகையில்,‘‘ என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு பிரச்னையே அல்ல. இதுகுறித்து சேவக், பிரித்தி ஜிந்தாவிடம் பேசவுள்ளேன்,’’ என்றார்.

உரசல் இல்லை

பிரித்தி ஜிந்தா வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘  எனக்கும், சேவக்கிற்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. தேவையில்லாத செய்தியை, ஊதி பெரிதாக்கி, என்னை ‘வில்லி’ போல காண்பிக்கின்றனர்,’ என்றார்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?