Advertisement


நடால் ‘50’ * புதிய சாதனை படைத்தார்

மே 11, 2018.
 Comments [1]  
 


Nadal breaks McEnroe record with 50 th consecutive set win
 

மாட்ரிட்: களிமண் தரை மைதானங்களில், தொடர்ந்து 50வது செட்டை கைப்பற்றி, 34 ஆண்டுகால சாதனையை தகர்த்து, புதிய வரலாறு படைத்தார் ஸ்பெயின் வீரர் நடால். 

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர், களிமண் மைதானத்தில் (‘கிளே கோர்ட்’) நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ சுற்றில், உலகின் ‘நம்பர்–1’ வீரரான ரபெல் நடால், அர்ஜென்டினாவின் டீகோவை, சந்தித்தார். சொந்தமண்ணில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6–3, 6–4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

இதையடுத்து, களிமண் தரையில் விளையாடிய போட்டிகளில் தொடர்ந்து 50 செட்களை கைப்பற்றி 34 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். இதற்கு முன், ஓபன் எராவில் (தொழில் ரீதியிலான ஆட்டங்கள்), அமெரிக்காவின் மெக்கன்ரோ, 1984ல் தொடர்ச்சியாக 49 செட்களை கைப்பற்றி இருந்தார். 

‘களிமண்’ கள நாயகன்

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 16 கோப்பைகள் வென்றவர் நடால். இதில், களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் மட்டும் 10 முறை (2005–2008, 2010–2014, 2017) கோப்பை வென்று சாதித்துள்ளார். விரைவில் இவருக்குப் பிடித்த பிரெஞ்ச் ஓபன் தொடர் (மே 27 முதல் ஜூன் 10, களிமண் தரை) துவங்கவுள்ள நிலையில், இவ்வகை போட்டிகளில் தொடர்ந்து 50 செட்கள் வென்றது, கூடுதல் ஸ்பெஷல் தான்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
E. RAJAVELU 2 weeks ago | Report abuse
எனக்கு பிடித்த முன்னாள் வீரர் இவான் லேண்டில் இப்போது நடால். சபாஷ் மை ஹீரோ.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?