Advertisement


சபாஷ் அஷ்வின்: பஞ்சாப் கேப்டனாக அசத்தல்

மே 07, 2018.
 Comments  
 


Ashwin, Punjab, Captain, IPL T20 Cricket
 

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., தொடரில் கேப்டனாக அசத்துகிறார் அஷ்வின்.

ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் ஏலத்தில் தமிழகத்தின் அஷ்வின், சென்னை அணியால் கைவிடப்பட்டார். இவரை ரூ. 7.6 கோடி கொடுத்து வாங்கிய பஞ்சாப் அணி, துணிச்சலாக கேப்டனாக நியமித்தது. தற்போது 9 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி, 6ல் வெற்றி பெற்று, 2014க்குப் பின் ‘பிளே ஆப்’ செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கு அஷ்வின் வகுத்த வியூகங்கள் முக்கிய காரணம்.

திட்டம் என்ன: போட்டியில் முடிவு குறித்து கவலைப் படாமல், வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல், சிறந்த கட்டமைப்பை உருவாக்கி வருகிறார். பேட்ஸ்மேன்களை விட, பவுலர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கிறார். பவுலர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தால், அவர்களை நீக்கி விடாமல், அடுத்த போட்டியிலும் களமிறக்குகிறார். இதனால் தான், மும்பைக்கு எதிராக சொதப்பிய முஜீப் (37 ரன்), அடுத்து ராஜஸ்தான் போட்டியில் ஆட்ட நாயகன் (27 ரன், 2 விக்.,) ஆனார்.

மூன்று ‘சுழல்’: ராஜ்புத், மோகித் சர்மா, பரிந்தர் ஸ்ரண் என, ஒவ்வொரு ‘வேகங்களையும்’ சோதனை செய்து, நம்பகமான ஆன்ட்ரூ டைக்கு ‘பார்ட்னர்’ ஆக களமிறக்குகிறார். ஒரு சில போட்டிகளில் தன்னுடன், அக்சர் படேல், முஜீப்பையும் சேர்த்து, மூன்று ‘சுழல்’ வீரர்களுடன் விளையாடுகிறார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக இந்த கூட்டணி முக்கிய கட்டத்தில் வீசிய 7 ஓவர்கள் தான், அந்த அணியின் ஸ்கோர் குறைய பெரும் காரணமாக இருந்தது.

‘ரெஸ்ட்’ உண்டு: பேட்டிங் என்று வரும் போது யுவராஜ் சிங், டேவிட் மில்லர், பின்ச் என, எவ்வளவு பெரிய வீரர் என்று பார்க்காமல், ‘பார்ம்’ சரியில்லை என்றால், விளையாடும் லெவனில் இடமில்லை என, துணிச்சல் காட்டுகிறார். ‘டுவென்டி–20’ ஜாம்பவான் கெய்லை நன்கு பயன்படுத்தும் அஷ்வின், தேவையான நேரத்தில் ஓய்வும் கொடுக்கிறார்.

எல்லாம் சாதகம்: ‘டாஸ்’ தேர்வு, களத்தில் முடிவு எடுப்பது என, இவரது ஒவ்வொரு செயல்களும், வழக்கத்துக்கு மாறாக இருந்தாலும், சாதகமான பலனையே தருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ரிச்சி பெனாடு, வாசிம் அக்ரம், கபில்தேவ் போன்ற பவுலர்கள் கேப்டன் பதவியில் முத்திரை பதித்தனர்.  இவர்களை போல அஷ்வினும் ஜொலிப்பது பஞ்சாப் அணிக்கு நல்ல விஷயம் தான்.

ஸ்பெஷல் ஒன்றுமில்லை

கேப்டன் அஷ்வின் கூறுகையில்,‘‘ சிறந்த அணியை தேர்வு செய்வது, நிலைமைக்கு ஏற்ப பவுலர்களை மாற்றுவது தான் எனது பணி.  முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். அவ்வளவு தான், இதில் ஸ்பெஷல் ஒன்றும் இல்லை,’’ என்றார்.

ராஜஸ்தான் கோட்டையில்...

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., தொடரில் மே 8ல் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல் (376 ரன்) துவக்கத்தில் கைகொடுக்கிறார். கெய்ல் (310), எழுச்சி பெறுவார் என நம்பப்படுகிறது. கருண் நாயர் (240), பின் வரிசையில் ஸ்டாய்னிஸ் ரன் மழைக்கு உதவ காத்திருக்கின்றனர்.

பவுலிங்கில் கடந்த போட்டியில் கலக்கிய முஜீப் அர் ரஹ்மான் (12 விக்.,), ஆன்ட்ரூ டை (12) ஜோடியுடன் அஷ்வின், அக்சர் படேல் கூட்டணி, மீண்டும் மிரட்டும் பட்சத்தில், ராஜஸ்தான் அணியை சாயக்கலாம்.

கட்டாய வெற்றி: ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ப்பூர் ‘கோட்டையாக’ இருந்தது உண்டு. இம்முறை சொந்தமண்ணில் களமிறங்கிய 4 போட்டிகளில் 2ல் தான் வென்றது. மொத்தம் 9 போட்டிகளில் 3ல் மட்டும் வென்ற ராஜஸ்தான், பஞ்சாப் அணியை வெல்லவில்லை எனில், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு ‘அம்போ’ தான்.

பஞ்சாப்புக்கு எதிராக கடந்த போட்டியில், ஒருகட்டத்தில் வலுவாக (100 ரன்/3 விக்.,) இருந்த, ராஜஸ்தான், பிறகு திடீரென சொதப்பியது.

இதனால், சஞ்சு சாம்சன் (310), பட்லர் (238), கேப்டன் ரகானே (230) சுதாரிக்க வேண்டும். பவுலிங்கில் உனத்கட் (7 விக்.,), ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்ஸ், குல்கர்னி என, யாரும் பெரியளவில் சாதிக்காதது குறை தான்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?