Advertisement


கடைசி ஓவரில் பெங்களூரு தோல்வி

மே 07, 2018.
 Comments  
 


Hyderabad, Bangalore, IPL T20 Cricket, Virat Kohli
 
ஐதராபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் சொதப்பிய பெங்களூரு அணி, 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ‘வேகத்தில்’ மிரட்டிய புவனேஷ்வர், கவுல், ஐதராபாத் அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

வில்லியம்சன் அரைசதம்: முதலில் ‘பேட்’ செய்த ஐதராபாத் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (5), ஷிகர் தவான் (13) ஏமாற்றினர். மணிஷ் பாண்டே (5) நிலைக்கவில்லை. மொயீன் அலி வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார் சாகிப் அல் ஹசன். உமேஷ் யாதவ், யுவேந்திர சகால் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த கேப்டன் வில்லியம்சன், இந்த சீசனில் 5வது அரைசதமடித்தார். இவர், 56 ரன்னுக்கு உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ வெளியேறினார்.

சவுத்தீ பந்தில் சாகிப் (35) ‘பெவிலியன்’ திரும்பினார். முகமது சிராஜ் வீசிய 19வது ஓவரில், யூசுப் பதான் (12), விரிதிமன் சகா (8) அவுட்டாகினர். சவுத்தீ வீசிய 20வது ஓவரில் ரஷித் கான் (1), சித்தார்த் கவுல் (1) ‘ரன்–அவுட்’ ஆகினர். கடைசி பந்தில் சந்தீப் சர்மா, ‘டக்–அவுட்’ ஆனார்.

ஐதராபாத் அணி, 20 ஓவரில், 146 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. புவனேஷ்வர் (1) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் முகமது சிராஜ், சவுத்தீ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

கோஹ்லி ஆறுதல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல் (20), மனன் வோரா (8) சுமாரான துவக்கம் தந்தனர். சாகிப் வீசிய 5வது ஓவரில், ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய கேப்டன் கோஹ்லி (39), ஆறுதல் தந்தார். டிவிலியர்ஸ் (5), மொயீன் அலி (10) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த கிராண்ட்ஹோம், ரஷித் வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்டார்.

புவனேஷ்வர் அசத்தல்: கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரின், முதல் 5 பந்தில் 6 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் சிக்சர் தேவைப்பட்ட நிலையில், கிராண்ட்ஹோம் (33) போல்டானார். பெங்களூரு அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 141 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மன்தீப் சிங் (21) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் சார்பில் சாகிப், 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்மூலம் 8வது வெற்றியை பதிவு செய்த ஐதராபாத் அணி, 16 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஏழாவது தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மங்கியது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?