Advertisement


ககன்–பூஜாவுக்கு வெள்ளி

மே 07, 2018.
 Comments  
 


Grand Prix of Liberation international shooting competition, Czech Republic, Gagan Narang, Pooja Ghatkar
 

பில்சென்: செக்குடியரசில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ககன் நரங், பூஜா ஜோடி, 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் வெள்ளி வென்றது.

செக்குடியரசில், 49வது சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங், பூஜா கட்கார் ஜோடி, 833.2 புள்ளிகள் (ககன்: 419.7 + பூஜா: 413.5 புள்ளி) பெற்று முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. பைனலில், ககன் நரங்–பூஜா ஜோடி, 495.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

பின், 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீ நிவேதா பரமானந்தம், அமன்பிரீத் சிங் ஜோடி, 775 புள்ளிகளுடன் (ஸ்ரீ நிவேதா: 385 + அமன்பிரீத்: 390 புள்ளி) முதலிடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. அடுத்து நடந்த பைனலில், இந்திய ஜோடி, 475.9 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.

பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ தனிநபர் பிரிவில் இந்தியாவின் மிஹிகா தங்கம் வென்றார். இதேபோல, பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் ஸ்ரீ நிவேதா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?