Advertisement


பயஸ் ஆசை நிறைவேறுமா

மே 06, 2018.
 Comments  
 


paes
 

புதுடில்லி: பயசின் டென்னிஸ் தாகம் தணியவே இல்லை. செரினா மகளுடன் 2040ல் விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் விளையாட ஆர்வமாக உள்ளாராம்.

இந்தியாவின் ‘சீனியர்’ டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 44. ஆஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், யு.எஸ்., ஓபன் என நான்குவிதமான கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் கோப்பை வென்றுள்ளார். டேவிஸ் கோப்பை அரங்கில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றி (43) பெற்ற வீரர் என்ற சாதனை படைத்தார். ஓய்வு குறித்து சிந்திக்காமல் தொடர்ந்து டென்னிசில் ஜொலிக்கிறார். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைக்கு பயஸ் ‘டுவிட்டரில்’ ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதில்,‘ வரும் 2040ம் ஆண்டு நடக்கவுள்ள விம்பிள்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் என்னுடன் சேர்ந்து விளையாட உங்கள் மகள் அலெக்சிஸ் ஒலிம்பியா தயாரா. இவரால் எனக்கு கோப்பை வென்று தர முடியுமா,’ என, கேட்டுள்ளார்.

இதன் மூலம் ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்பதை பயஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?