Advertisement


டயமண்ட் லீக்: நீரஜ் 4வது இடம்

மே 05, 2018.
 Comments  
 


Neeraj Chopra
 

தோகா: டயமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நான்காவது இடம் பிடித்தார்.

கத்தார் தலைநகர் தோகாவில் டயமண்ட் லீக் தடகள போட்டிகள் நடந்தன. இதன் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். சமீபத்திய, காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றதால் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதில் மொத்தம் 6 வாய்ப்புகள் தரப்பட்டன. அதிகபட்சமாக இரண்டாவது வாய்ப்பில் நீரஜ் 87.43 மீ., துாரம் எறிந்தார். இதனால், பதக்க வாய்ப்பை இழந்த இவர் நான்காவது இடம் பிடித்தார். ஆனால், தனது முந்தைய தேசிய சாதனையை (86.48 மீ.,, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், போலந்து, 2017) முறியடித்து ஆறுதல் அடைந்தார். வரும் 26ம் தேதி அமெரிக்காவின் எகுனியாவில் நடக்கவுள்ள டயமண்ட் லீக் போட்டியில் நீரஜ் பங்கேற்க உள்ளார். இப்போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் முறையே ஜெர்மனியின் ரோக்லர், வெட்டர், ஆண்ட்ரியஸ் வென்றனர்.

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?