Advertisement


விலை மதிப்பற்ற வைரங்கள் செய்னா, சிந்து

மே 05, 2018.
 Comments  
 


Saina, sindhu
 

புதுடில்லி: ‘‘ செய்னா, சிந்து இருவரும் வெற்றிகரமான வீராங்கனைகள். இருவரும் விலை மதிப்பற்ற வைரங்கள்,’’ என, பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார்.

இந்திய பாட்மின்டன் முன்னணி வீராங்கனைகள் செய்னா நேவல், 28, மற்றும் சிந்து, 22. சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் செய்னா, தங்கம் வெல்ல, சிந்து, வெள்ளி கைப்பற்றினார். இதுகுறித்து பயிற்சியாளர் கோபிசந்த் கூறியது:

வெற்றி, தோல்வி என்பது தினமும் எனது ஐதராபாத் அகாடமியில் நடந்து கொண்டு தான் உள்ளது. இது விளையாட்டில் சகஜம். வெற்றி பெறுபவருக்கு பாராட்டு கிடைக்கும். தோல்வியடைந்தால், தங்களை இன்னும் உயர்த்திக் கொண்டு, வெல்ல வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் செய்னா, சிந்து இருவரும் வெற்றிகரமான வீராங்கனைகள். இருவரும் விலை மதிப்பற்ற வைரங்கள். போட்டிகளின் போது, அவர்களது அறைக்குச் சென்று, அலைபேசி, லேப் டாப்பை பறித்து விடுவேன். ‘பிரிட்ஜில்’ சாக்லேட் இருந்தால் எடுத்து விடுவேன். எல்லாம் இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான். இருவரும் எனது மாணவிகள். இவர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது தான், எனது கனவு. இவ்வாறு கோபிசந்த் கூறினார்.

ரூ. ஒரு கோடி பரிசு

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு, பாட்மின்டனில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்களுக்கு, இந்திய பாட்மின்டன் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் துருவ் பத்ரா, இந்திய பாட்மின்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலப்பு அணிகள் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்ற 10 பேர் கொண்ட இந்திய அணியினருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. ஒற்றையரில் தங்கம் வென்ற செய்னா நேவலுக்கு ரூ. 20 லட்சம், வெள்ளி வென்ற சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு தலா ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற சத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடிக்கு தலா ரூ. 7.5 லட்சம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய அணியினருக்கு ரூ. 1 கோடியே 30 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?