Advertisement


இணைந்த கொரிய கைகள்

மே 04, 2018.
 Comments  
 


korea team
 

ஹாம்ஸ்டட்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்,அரையிறுதியில் வட கொரியா மற்றும் தென் கொரிய அணிகள் இணைந்து விளையாட உள்ளன.

ஆசிய நாடுகளான வட கொரியா, தென் கொரியா இரண்டும் பரம எதிரிகள். சமீபத்தில் இரு நாடுகளும் நட்பு பாராட்டி வருகின்றன. ரஷ்யாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில், ஐஸ் ஹாக்கி அணிகள் இணைந்து விளையாடின.

தவிர, இருநாட்டு அதிபர்களும், பகைமை மறந்து சமீபத்தில் நேரில் சந்தித்துக் கொண்டனர். தற்போது, சுவீடனில் நடக்கும்உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இரு அணிகளும் பங்கேற்கின்றன. இதன் பெண்கள் காலிறுதியில் வட மற்றும் தென் கொரிய அணிகள் மோத இருந்தன.

ஆனால், இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து விளையாட மாட்டோம். எங்களை ஒருங்கிணைந் கொரிய அணியாக, அரையிறுதியில் பங்கேற்க அனுமதியுங்கள் என, திடீரென கோரிக்கை விடுத்தனர். இதற்கு முன், 1991ல் இரு அணிகளும் இணைந்து விளையாடி, தங்கம் வென்றன.

தற்போது, இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து, அரையிறுதியில் கொரியா–ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதுகுறித்து சர்வதேச டேபிள் டென்னிஸ் தலைவர் தாமஸ் வெய்கெர்ட் கூறுகையில்,‘‘ இதுபோல திடீரென இணைந்து விளையாட விதிகளில் இடமில்லை. இவ்விஷயத்தில் விளையாட்டினை தாண்டி, அமைதி முயற்சிக்காக செய்யப்படுகிறது என்பதால், இம்முறை அனுமதிக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோல செய்ய மாட்டோம்,’’ என்றார்.

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?