Advertisement


ஹாக்கி பயிற்சியாளர் மாற்றம்

மே 01, 2018.
 Comments  
 


Harendra singh
 

புதுடில்லி: இந்திய ஆண்கள் அணி ஹாக்கி பயிற்சியாளராக ஹரேந்திரா சிங் நியமிக்கப்பட்டார். 

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்தின் ரோலண்ட் ஆல்ட்மன்ஸ் நீக்கத்துக்குப் பின், கடந்த நவம்பர் மாதம், மரிஜ்னே (நெதர்லாந்து) நியமிக்கப்பட்டார். பெண்கள் அணி பயிற்சியாளராக இருந்த இவரை ஆண்கள் அணிக்கு தேர்வு செய்ததற்கு, அப்போது எதிர்ப்பு எழுந்தது. 

இருப்பினும், மரிஜ்னே பயிற்சியின் கீழ், இந்திய அணி 10 ஆண்டுக்குப்பின், ஆசிய கோப்பையில் தங்கம் வென்றது. ஆனால், சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டில் 4வது இடமே கிடைத்தது. 2006க்குப் பின் முதன் முறையாக இந்திய ஆண்கள் அணி எவ்வித பதக்கமும் இல்லாமல் திரும்பியது.

அதேநேரம், ஹரேந்திரா சிங், பயிற்சியில் இந்திய பெண்கள் அணி, 4வது இடம் பெற்றது. இது குறித்து விவாதிக்க ஹாக்கி இந்தியாவின் (எச்.ஐ.,) கூட்டம் நடந்தது. இதன் முடிவில், மரிஜ்னே பெண்கள் அணிக்கான பயிற்சியாளராக மாற்றப்பட்டார். ஹரேந்திரா சிங், ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில், இந்திய ஜூனியர் ஆண்கள் அணி, 2016ல் உலக கோப்பை வென்றுள்ளது. 

இது குறித்து எச்.ஐ., செயலர் முஸ்தாக் அகமது கூறுகையில்,‘‘ இந்திய ஆண்கள் அணியை ஏற்கனவே ஹரிந்தர் சிங் (2009–11) வழிநடத்தி உள்ளார். ஜூனியர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்த அனுபவம் உள்ளது. இதனால், இவர் ஆண்கள் அணி பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். மரிஜ்னே மீண்டும் பெண்கள் அணிக்கு திரும்புகிறார்,’’ என்றார். 

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?