Advertisement


ரோகித்–கோஹ்லிக்கு அக்னிப்பரீட்சை: இன்று பெங்களூரு–மும்பை மோதல்

ஏப்ரல் 30, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Chennai, Mumbai, Rohit, Virat Kohli
 

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று மும்பை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணிக்கு ‘பிளே–ஆப்’ வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது. 

இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் இன்று நடக்கும் முக்கிய லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, சொந்தமண்ணில் ரோகித் சர்மாவின் மும்பை அணியை சந்திக்கிறது. 

இரு அணிகளும் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில், 2ல் மட்டும் வெற்றி பெற்று, தலா 4 புள்ளிகளுடன், பட்டியலில் 6, 7வது இடத்தில் உள்ளன. அதேநேரம், சொந்தமண்ணில் சென்னை, கோல்கட்டா அணிகளிடம் தோற்ற சோகத்தில் பெங்களூரு உள்ளது. 

காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் களமிறங்காத டிவிலியர்ஸ், இன்று களமிறங்குவதால் நம்பிக்கையுடன் உள்ளனர். துவக்க வீரர் குயின்டன் டி காக் ஆறுதல் தருகிறார். பவுலிங்கில் தமிழகத்தின் முருகன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு போட்டியாக உள்ளார். 

கோஹ்லியை பொறுத்தவரையில், சரியான நேரத்தில், சரியான பவுலர்களை பயன்படுத்தாது, சரியான பீல்டிங் அமைக்காதது என, களத்தில் அதிகமாக தடுமாறுவதால் தோல்வி தொடர்கிறது. இன்று மீள்வாரா என, பொறுத்திருந்து பார்க்கலாம்.

ரோகித் நம்பிக்கை: மும்பை அணி, கடந்த முறை சென்னையை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. சூர்யகுமார் யாதவைத் (274 ரன்) தவிர, மற்ற வீரர்கள் நிலையற்ற பேட்டிங்கை வெ ளிப்படுத்துகின்றனர். கேப்டன் ரோகித் சற்று மீண்டு வர, குர்னால் பாண்ட்யா (113 ரன்), ஹர்திக் பாண்ட்யா (61 ரன்) சகோதரர்கள், 7 போட்டி முடிந்த பிறகும் சுதாரிக்காமல் தான் உள்ளனர்.

பவுலிங்கில் மார்க்கண்டே (10 விக்.,) தவிர, பும்ராவுடன், பாண்ட்யா சகோதரர்கள் ஆறுதல் தருகின்றனர். இன்று கோஹ்லி, பிரண்டன் மெக்கலத்தை கட்டுப்படுத்துவதைப் பொறுத்து தான், ரோகித் அணியின் வெற்றி முடிவாகும். 

இரு அணிகளும் தலா 2 வெற்றி மட்டும் பெற்ற நிலையில், இன்றைய வெற்றி இருவருக்கும் மிக முக்கியம். ஏனெனில், தோற்கும் அணிக்கு ‘பிளே ஆப்’ செல்லும் வாய்ப்பு குறைந்து விடும். இதனால், வெற்றி யாருக்கு கிடைக்கும் என, பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?