Advertisement


பஞ்சாப் வீரர் கெய்ல் வருத்தம்

ஏப்ரல் 30, 2018.
 Comments  
 


Chris Gayle, Punjab, IPL T20 Cricket
 

மொகாலி: ‘‘என்னை தக்கவைப்பதாக கூறிவிட்டு, கடைசியில் அணியில் இருந்தே கழற்றி விட்டனர். இது வருத்தமாக இருந்தது,’’ என, கெய்ல் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று சீசனுக்குப் பின், பெங்களூரு அணிக்காக விளையாடியவர் கெய்ல், 38. இந்த அணிக்காக 5 சதம் அடித்தவர். சரியான ‘பார்ம்’ இல்லை என்பதால், இம்முறை கழற்றிவிடப்பட, பஞ்சாப் அணியில் இணைந்தார். இங்கு 4 போட்டியில் ஒரு சதம், அரைசதம் உட்பட, 252 ரன்கள் எடுத்துள்ளார்.

அணி மாறியது குறித்து கெய்ல் கூறியது:

பெங்களூரு அணியின் முக்கிய வீரராக இருந்தேன். ஏலத்துக்கு முன் என்னை தொடர்பு கொண்ட அணி நிர்வாகம், ‘நான் அணியில் நீடிக்க வேண்டும்,’ என்றனர். இதனால், தக்கவைத்துக்கொள்வோம் என, உறுதி தந்தனர். இதன் பின் அழைப்பு வரவே இல்லை. இதனால், அவர்கள் என்னை தேர்வு செய்ய விரும்பவில்லை என புரிந்து கொண்டேன். இது மிக ஏமாற்றமாக இருந்தது.

இப்போது இடம் பெற்றுள்ள பஞ்சாப் அணி, இதுவரை ஐ.பி.எல்., கோப்பை வென்றது இல்லை. அணி உரிமையாளர் பிரித்தி ஜிந்தா, ஆர்வத்துடன் உள்ளார். அணி வீரர்களை உற்சாகப்படுத்துவது ஆச்சரியமாக உள்ளது. இவருக்காக, இந்த ஆண்டு பஞ்சாப் அணி கோப்பை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

இவ்வாறு கெய்ல் கூறினார்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?