Advertisement


பிரஜ்னேஷ் முன்னேற்றம்

ஏப்ரல் 30, 2018.
 Comments  
 


Prajnesh Gunneswaran, ATP Tennis Ranking
 

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 176வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 84 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 176வது இடம் பிடித்தார். இவர், சமீபத்தில் சீனாவில் நடந்த சாலஞ்சர் தொடரில் கோப்பை வென்றார். இது, இவரது முதலாவது ஏ.டி.பி., சாலஞ்சர் ஒற்றையர் பிரிவு பட்டமாகும்.

மற்ற இந்திய வீரர்களான யூகி பாம்ப்ரி (85வது இடம்), ராம்குமார் ராமநாதன் (120வது) பின்னடைவை சந்தித்தனர்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா (23வது இடம்), திவிஜ் சரண் (43வது), லியாண்டர் பயஸ் (50வது) பின்தள்ளப்பட்டனர்.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, முதன்முறையாக 193வது இடத்துக்கு முன்னேறினார். இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, 24வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?